Thursday, September 25, 2008

ஐ.ஏ.எஸ்.,மற்றும் ஐ.பி.எஸ்., நுழைவுத்தேர்விற்கான இலவச பயிற்சி

 

சென்னையில் ஐ.ஏ.எஸ்.,மற்றும் ஐ.பி.எஸ்., நுழைவுத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை அண்ணாநகரில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணி தேர்வுக்கு பகுதி நேர மற்றும் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.பழங்குடியினர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பினரை சேர்ந்த பட்டப்படிப்பு முடித்து குறைந்த பட்சம் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

வரும் நவ.,9ல் நுழைவுத்தேர்வு நடக்கிறது. தகுதியுள்ள மாணவர்கள் சென்னை அண்ணா நகரில் உள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் செப்.,30க் குள் அனுப்ப வேண்டும்.

நுழைவுத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை, கோயம் புத்தூர், நெல்லை, சேலம், வே லூர், சிதம் பரம், தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை ஆகிய ஊர்களில் நடக்கிறது. இவ்வாறு சென்னை அண்ணா மேலாண்மை நிலைய பயிற்சித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment