கொச்சி:மருத்துவமனையில் இறந்த ஏழைப் பெண்ணின் உடலை பெறு வதற்கு, அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தனது தங்க வளை யல்களை கழற்றிக் கொடுத்தார் கேரளாவைச் சேர்ந்த பெண் போலீஸ். அவரின் மனித நேயமிக்க இந்த செயலை பாராட்டி கோல் கட்டா தன்னார்வ தொண்டு நிறுவனம், நான்கு தங்க வளையல் களை பரிசளிக்க முடிவு செய் துள்ளது.
கேரளா திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் உஷா. ஏழைக் குடும் பத்தை சேர்ந்தவர். சில வாரங் களுக்கு முன் உஷாவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற் பட்டது. அதில் உஷா கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஒல்லூர் போலீஸ் ஸ்டே ஷனில் புகார் செய்யப் பட்டது. விசாரணை நடத்தும் படி, அங்கு பணிபுரிந்த பெண் போலீஸ் அபர்ணா மற்றும் மேலும் ஒரு போலீஸ்காரரையும் அனுப்பி வைத்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற் குள், உஷா இறந்து விட்டார். உஷாவின் உடலை உறவினர் களிடம் ஒப்படைக்க மருத்துவ மனை நிர்வாகம் மறுத்து விட்டது. சிகிச்சை அளித்ததற் கான கட்டணமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என, மருத்துவ மனை நிர்வாகம் கண்டிப்பாக கூறி விட்டது. எங்களிடம் அத்தனை பணம் இல்லை என, உறவினர்கள் கூறியும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண் போலீஸ் அபர்ணா, மருத்துவமனை நிர் வாகிகளிடம் பேசி, கட்டணத்தை 20 ஆயிரம் ரூபாயாக குறைத்தார். ஆனால், அந்த பணத்தையும் அவர் களால் செலுத்த முடியவில்லை.
நேரம் கடந்து கொண்டிருந் தது. உஷாவின் உறவினர்கள் அழுது புலம்பினர். எங்கெங்கோ சென்றும் பணம் கிடைக்கவில்லை. இதைப் பார்த்த அபர்ணாவின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. உஷாவின் உறவினர்களிடம் சென்று, தான் அணிந்திருந்த இரண்டு தங்க வளையல்களையும் கழற்றிக் கொடுத்தார். இதை அடகு வைத்து, உடலை திரும்ப பெறுங்கள் என கூறினார். இதையடுத்து, வளையல் களை அடகு வைத்து உஷாவின் உடலை உறவினர்கள் திரும்ப பெற்றனர். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.
இதைப் பார்த்த கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு வர்த்தக நிறுவனம், அபர்ணாவின் மனித நேயத்தை பாராட்டி, அவருக்கு நான்கு தங்க வளையல்களை பரிசளிக்க முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சந்திரா கூறியதாவது: இதுபோன்ற மனித நேயச்செயல்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அப்போது தான், மனித நேயம் அதிகரிக்கும். எங்கள் நிறுவனத்தின் நோக்கமும் அதுதான். அடுத்த ஆண்டு அபர்ணாவை கோல்கட்டாவிற்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்த திட்ட மிட்டுள்ளோம். அப்போது, அவருக்கு வளையல்கள் பரிசளிக்கப்படும். இவ்வாறு சந்திரா கூறினார்.
No comments:
Post a Comment