தூத்துக்குடி அருகே ஒரு தோட்டத்தில் விளைந்த வாழைத்தாரில் மொத்தம் 340 காய்கள் இருந்தன. "30 ரூபாய் செலவு செய்து வாழை மரத்தை வளர்த்தால், அதில் விளையும் தாரை, 300 ரூபாய்க்கு விற்கலாம்' என, விவசாயி மாடசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அடுத்துள்ள சேர்வைக்காரன் மடத்தில், ஜோஸ்வா ரத்தினராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில், மாடசாமி என்பவர் வேலை செய்து வருகிறார். அங்கு, "கற்பூரவல்லி' வாழை இனத்தைச் சேர்ந்த ஆயிரம் வாழைகள், கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன் பயிரிடப்பட்டன. தற்போது அந்த வாழை மரங்களின் தார்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. அதில் பெரும்பாலானவை வெட்டி விற்கப்பட்டன. அவ்வாறு விளைந்த ஒரு தாரில், 19 சீப்புகளில், மொத்தம் 340 காய்கள் இருந்தன.
விவசாயிக்கு பாராட்டு : தூத்துக்குடியில் நேற்று நடந்த நுண்நீர் பாசனக் கருத்தரங்கிற்கு, அந்த கற்பூரவல்லி "மெகா சைஸ்' வாழைத் தாரை, விவசாயி மாடசாமி கொண்டு வந்திருந்தார். அந்த தாரைப் பார்த்து பாராட்டி கலெக்டர் பழனியாண்டி உள்ளிட்டோர் மாடசாமிக்கு பரிசு வழங்கினர். மாடசாமி கூறுகையில்,"தேரி செம்மண், நுண்நீர்ப் பாசனம், நல்ல உரம் ஆகியவற்றால் வாழைத்தார் நன்கு வளர்ச்சியடைந்து, அதில் 340 காய்கள் உள்ளன. ரூ. 30 செலவு செய்து "கற்பூரவல்லி' வாழை மரத்தை வளர்த்தால் அதில் கிடைக்கும் தாரை வெளிமார்க்கெட்டில் ரூ. 300 வரை விற்கலாம்' என்றார்.
No comments:
Post a Comment