Tuesday, May 14, 2013

தமிழ் அடிமைகள் !!

பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும் மது பாணங்கள் முக்கிய பங்கு வைக்கின்றன. ஒரு தனி மனிதனை அரசியல் தலைவர்கள் மது அருந்த செய்து அவனை மதி கெட செய்து இது போன்ற சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். எனவே மதியை கெடுக்கும் மது கடையையும் சேர்த்து தடை செயுங்கள் - எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே".

நல்ல விஷயங்களை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எதற்கும் ஒரு எல்லை உண்டு. 1989 வருடங்களில் மரத்தை வெட்டி ரோட்டை அடித்து, 10 நாட்கள் அராஜகம் செய்து பேருந்தை இயங்காமல் செய்து, கடைகளை மூடி சொல்லி மாளாது அத்தனை அராஜகம். மனிதனை பார்த்தால் மகிழ்ச்சி பிறக்க வேண்டும். ஆனால் இவர்களை பார்த்தால் வெறுப்பும் அருவருப்பும் பிறக்கிறது. உண்மையை சொன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஒரு வீர பெண்மணிதான். வெட்டி பேச்சி பேசுகிறவர் நிறைந்து இருக்கும் தமிழ்நாட்டில் மிக பெரிய விசயங்களை செயல்படுத்த கூடிய வல்லமை நமது தமிழக முதல்வரால் மட்டுமே முடியும்.

ராமதாஸ் நாகரீகத்தை இழந்து வெகு நாளாகி விட்டது. வன்முறையை தூண்டுவதை நிறுத்த மறுப்பதல்லாமல், அதை மற்றவர்கள் மேல் சுமத்த முயற்சிக்கிறார். காடுவெட்டி குருவை தலைவனாக கொண்ட ஒரு இயக்கம் நாகரீகமாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு மரத்துக்கு குறைந்தது 100 கோடி யாவது மதிப்பீடு வையுங்கள். அப்போது தான் இயற்கையின் மதிப்பு அவர்களுக்கு தெரியும்.  ராமதாசும் அன்புமணியும் வன்முறையாளர்களாக மாறியிருப்பது வேதனை. வன்னியர்களில் பெரும்பாலனோர் விவசாய கூலிகள். படிக்காதவர்கள். வறுமையில் வாடுபவர்கள்.அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடாமல், வன்னியர்களை தீய வழியில் இட்டுச்செல்கிறார் ராமதாஸ். பாமக ஓர் அரசியல் இயக்கம் என்றால் ஒரு சமுதாயத்திற்காக மட்டும் குரல் கொடுக்க முடியுமா. பாமகவின் தலித் பிரதிநிதிகளின் நிலையம் கருதும் என்ன? தலித் ஒருவரை தலைவராக கொண்ட கட்சி பாமக என்றால் அக்கட்சிதலைவரின் நிலை என்ன? பாமக தலித்தலைவரை வெறும் பொம்மையாக பயன் படுத்துகிறதா? பாமகவினரை தவறான வழியில் நடத்தி, வன்னியர்களை வன்முறையாளர்களாக மாற்றி தன சுயநலத்துக்காக பயன்படுத்தும் ஒரே தலைவர் ராமதாஸ் மட்டுமே. இந்த சுயநல தலைவர்களை ஏற்றுகொள்ளும் சமூகம் அதற்கான விலையையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்... பாவம் ராமதாசின் அடிமைகள் !!

பாமக, விடுதலை சிறுத்தைகள், இந்த இரண்டு கட்சிகளுமே தடை செய்யப்படவேண்டும் - இதில் உள்ள பலர் சாதி கூட்டம் இருக்கிறது என்ற திமிரில் கட்ட பஞ்சாயத்து கொலை என தினமும் தொழிலாக செய்து வருகிறார்கள் - திண்டிவனம் துவங்கி கும்பகோணம் வரை இவர்களது கட்ட பஞ்சாயத்து தொடர்ந்து நடைபெற்றுவருகிறது - இந்த இரு கட்சிகளிலும் உள்ள வழக்கறிஞர்கள் இந்த கட்ட பஞ்சாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளார்கள். காவல் துறையில் உள்ள இந்த இரு சாதியினரை சேர்ந்த சில உயர் அதிகாரிகளே இதற்கு பெரிதும் உடந்தையாக உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது - குறிப்பாக திண்டிவனம் முதல் கும்பகோணம் வரை உள்ள கிராமங்களில் இவர்களது அட்டகாசம் பொறுக்கமுடியவில்லை - இந்த இரு சாதி அமைப்புகளின் மாவட்ட நகர பொறுப்பாளர்களின் தினசரி நடவடிக்கைகளை உளவுத்துறை கவனித்தால் உண்மை தெரியும் - தமிழக முதல்வர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நிச்சயமாக யாரும் துணிவோடு எடுத்ததில்லை - வரும் தேர்தல்களில் இந்த நடவடிக்கை முதல்வர் வெற்றிபெற துணைபுரியும் என்பதில் சந்தேகம் வேண்டாம் - இவர்கள் மேல் மற்றவர்கள் அந்த அளவு வெறுப்பாக உள்ளார்கள் - வீர வசனம் பேசியவர்கள் 12 நாளிலேயே ஆடிப்போய்விட்டார்கள்.

Wednesday, May 9, 2012

வெட்டுங்கள்: காட்டு கருவேல மரம்

சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்: அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. 

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்:
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்:
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை:
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு:
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்:
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !

வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம். இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்!!

Saturday, April 14, 2012

காற்று வெளியிடைக் கண்ணம்மா- பாரதி

சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாடல்….

மிகவும் அழகான வரிகள் :)

 

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)

Saturday, March 24, 2012

Earth hour…

Extract from Gems of Wisdom… ”The scientific community is given credit for bringing the civilization to the modern technological advanced age, conveniently labeling the history as dark ages. There was a rapid development in scientific community in terms of discoveries and inventions which led to Industrial Revolution. This revolution changed the face of the earth as we see it.

This advent of revolution was manifested in the form of consumerism. The factories came up, where thousands of men labored hard to earn their livelihood. These workers, were the farmers who had migrated from the villages. They dream of staying in a city, becoming independent and earning a livelihood by working hard in factories rather than the farms. Due to the desire fostered by the new born culture of greed where in everyone wanted to have more of everything for which they had to struggle and suffer even more in bad living conditions, smoke, grit and equally oppressive industrialists as the feudal lords in the villages. Even though the struggle was there, but the thought of staying in city and ability to consume the products of city made them artificially feel happy. It was something similar to what a thirsty desert animal feels on seeing the reflection of a mirage, which it misunderstands to be real water and gratifies itself thinking that water is nearby when it’s not.
The industrial revolution brought forward the steam engines, whose descendants now we see running with great ease on the metro overhead. Consumer electronics in its crude form took birth in the lap of burning furnaces in the factories. The “Bright Age” had come with the invention and subsequent mass production of bulb. The bulbs evolved to tube lights, neon lights and flood lights which adorn our stadiums. In this glitter of man made lights, the sun got clouded with the smoke that arose from factories. One of the crucial ingredients which contributed to the happenings was extraction of fuel. Petroleum and coal kept the furnaces burning, the production lines moving and the chimneys spewing smoke. The very smoke which filled the lungs of the workers causing them innumerable diseases. We even have a fancy word for the phenomena these days. Its called Occupational hazard.

This went on for 3 centuries in some parts of the world and for decades in some. It was a second coming for human civilization. And finally it reached the zenith of advancement when the soldiers of captain planet proposed to observe an hour of darkness to nullify the effect of centuries and decades of misuse of nature’s resources. In order to save the planet and give it to the future generation as it is, it was proposed by the do-gooders to switch off all lights in the house and enjoy a candle lit dinner with loved ones.

Earth Hour is a global event organized by WWF (World Wide Fund for Nature, also known as World Wildlife Fund) and is held on the last Saturday of March annually, asking households and businesses to turn off their non-essential lights and other electrical appliances for one hour to raise awareness towards the need to take action on climate change. Earth Hour was conceived by WWF and The Sydney Morning Herald in 2007, when 2.2 million residents of Sydney participated by turning off all non-essential lights..."

Monday, January 16, 2012

உதவித்தொகை: பிஎச்.டி. மாணவர்கள்

இந்திய பல்கலைக்கழகங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதன் தொடர்பான பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் உதவித் தொகை அளிக்கிறது. மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கல்விக் கட்டணம், புத்தகம், இதர செலவுகளுக்காக தொடர்ந்து 4 ஆண்டுகள் வரை அளிக்கப்படும். இந்தியாவில் மைக்ரோசாப்ட் ஆய்வுப் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்திய பல்கலையில் பிஎச்.டி. பயில பதிவு செய்திருப்பவர்கள் முதல் மூன்றாம் ஆண்டில் இருக்கும் மாணவர்கள் வரை இதற்கு தகுதியானவர்கள்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. பயில வேண்டும்.

 

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஏப்ரல் 17ஆம் தேதி. மேலும் விவரங்களுக்கு: http://research.microsoft.com

Friday, November 18, 2011

வாக்களித்த பலனை மக்கள் அனுபவிப்பார்கள்

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களுக்கு நல்ல மாற்றம் கிடைத்துள்ளது...ஐந்தாண்டுகளாக பால் விலை மற்றும் பேரூந்து கட்டணங்களை உயர்த்தாமல் ஆட்சி செய்த கலைஞரின் நிர்வாகம் எங்கே? ஆறு மாதத்துக்குள் ..இப்படி உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மக்களின் கழுத்தை அறுக்கும் இந்த விலை உயர்வினை அறிவித்துள்ள ஜெயாவின் நிர்வாக திறமை எங்கே?ஏன் பீர்..விஸ்கி போன்ற ..மது வகைகளின் விலையை உயர்த்துவதில் என்ன கஷ்டம்?சிகரட்..பீடி..வகைகளின் விலையை உயர்த்தி இருக்கலாமே? அதை விட்டு மக்களின் அன்றாட இன்றி அமையாத பொருளான பாலின் விலையையும்...பேரூந்து கட்டணத்தையும் உயர்த்துவது என்ன நியாயம்?

 

வாக்களித்தததன் பலனை மக்கள் அனுபவிப்பார்கள் என குஷ்பு கூறியது உண்மையாகி உள்ளது...வீணாக கடந்த ஆட்சியின் மீதும்..மத்திய அரசின் மீதும் பழியை போடுகிறார்...கேட்ட நிதி கிடைத்ததாக நீங்கள்தானே டில்லியில் கூறினீர்கள்...இப்போ ஏன் இந்த வழக்கமான பல்டி?கடந்த ஆட்சியின் நிர்வாக ஊழல்கள் களையப்பட்டதாக கூறினீர்களே ...அந்த களைஎடுப்பின் மூலம் கிடைத்த நிதி எங்கே? நிழலின் அருமை வெயிலில் போனால் தெரியும்...கலைஞரின் அருமை இப்போது பலருக்கு புரிந்திருக்கும்....தனியார் பேரூந்து உரிமையாளர்களை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு....தனியார் பால் உற்பத்தியினரை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு...என்ன செய்தால் என்ன...மீண்டும் சங்கரன்கோவில் இடை தேர்தலிலும் மக்கள் உங்களுக்குத்தான் வாக்களித்து நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்..அதன்மூலம் இந்த விலை உயர்வை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்று சொல்ல போகிறீர்கள்...எனவே மேலும் பல விலை உயர்வுகளை அறிவிக்க வேண்டுகிறேன்....தமிழ் மக்கள்..ரொம்ப நல்லவுங்க,,எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க…

 

உள்ளாட்சித் தேர்தல் வரை கமுக்கமாக இருந்துவிட்டு ஜெ. தனது வேலையைக் காட்டி விட்டார். எல்லோரும் ஜெ.வை துணிச்சலான பெண்மணி என்பர். உண்மையிலேயே நெஞ்சுரம் இருந்திருந்தால், இந்த விலை ஏற்றத்தை முன்பே செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே காரணம். இலவச மின்சாரம், இலவச தொலைக்காட்சி, இலவச ஈருருளை வண்டி, இலவச பேருந்து பயணம், இலவச மடிக்கணினி, இலவச மின் ஆட்டுக்கல் மற்றும் அரைப்பான், இன்னபிற.... இன்னபிற... அப்பப்பா எத்தனை இலவசங்கள். இதுவும் ஒரு கையூட்டே! அப்புறம் ஏன் கருவூலம் காலியாகாது? அதை எல்லாம் நம் தலையில்தானே ஏற்ற வேண்டும்! கையாலாகாத அரசியல் வியாதிகள்!! இந்த விலைவாசி ஏற்றத்துக்கு எல்லோரும் கருத்து சொல்லும்போது, அம்மா கூட்டணியில் இருந்து வாக்குக் கேட்ட 'தொழிலாள தோழர்கள்' கருத்துச் சொல்லாமல் உண்டியல் குலுக்கப் போய்விட்டார்களா? இல்லை, எதிரில் உட்கார வேண்டிய 'படைத்தளபதி' இன்னும் 'தெளிவு' பெறவில்லையா?

 

மானங்கெட்ட இந்த மனிதர்களுக்கு வாக்களித்த நாம் எப்போதுதான் கொள்ளிக்கட்டையால் தலையச் சொறிந்திருக்கின்றோம் என்பதை உணர போகின்றோம்?

Thursday, November 3, 2011

சர்ச்பார்க் ஸ்டூடன்டின் சிறுபிள்ளைத்தனம்

என்னதான் இணையதளத்தில் படித்தாலும், புத்தகங்களைப் படிப்பதில் உள்ள ஆத்மா திருப்தியே தனி. அந்த நிறைவை புத்தக வாசிப்பை பழக்கமாக, விருப்பமாக கொண்டவர்களாலேயே உணர முடியும். எது எப்படி இருந்தாலும், நூலகத்தை மூடுவது என்பது, தான் பெற்ற குழந்தையை தனது கைகளாலேயே கொலை செய்வது போன்றது. இரண்டு செயல்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஜெ. செய்வது இமாலயத்தவறு மட்டுமல்ல, வரலாற்றுப்பிழையும் கூட

 

தாலி அறுத்தவள் வீட்டில் தலா தலா பெருதனம் என்பார்கள். அதே போல் தமிழ்நாட்டின் நிலை உள்ளது. தமிழகத்தை பிடித்த பீடைகளான திமுக, அதிமுக இடையில் சிக்கி தமிழகம் சீரழிகிறது. நூற்று எழுபத்திரண்டு கோடி செலவில் நூலகம் அமைக்கவில்லை என்று யார் அழுதார்கள்? நூலகமே காணாத கிராமப்புறங்களும், சரிவர பராமரிக்கப்படாத நகர்ப்புற நூலகங்களும் இருக்கும் போது, அண்ணா நூற்றாண்டு நூலகம் தேவை தானா? மேலும், அண்ணா திமுக என்ற கம்பெனியின் ஸ்தாபகர். அவரின் நூற்றாண்டு விழாவை கம்பெனி செலவில் கொண்டாடியிருக்க வேண்டும். அதற்கு அரசுப்பணத்தை வீணடித்ததே தவறு. ஒழியட்டும். இப்போது கொட நாட்டு அரசி வந்ததும் அதை மாற்றியிருப்பது முழுக்க, முழுக்க காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்ன? ஏற்கனவே, புதிய தலைமை செயலகத்தை தன் விருப்பம் போல் பயன்படுத்த உத்தரவிட்டுள்ள ஜெயா இன்னும் இது போல் என்னென்ன தண்ட செலவுகளை செய்ய போகிறாரோ? தட்டி கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்ட பிரசண்டன் என்ற கதையாக, அராஜக திமுகவின் அருமை தலைவியை கேள்வி கேட்க இங்கு நாதி இல்லை. கேட்கவேண்டிய எதிர்கட்சி தலைவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை.

 

கட்சியை உடைக்க போகிறார்கள் என்றதுமே அவர் பல்டி அடித்து ஜெயா காலில் சரணாகதி அடைந்து விட்ட விஜயராஜிடம் வீரத்தை எதிர்பார்க்க முடியாது. பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதை ஜெயா ஆட்சி செய்தால் விபரீதங்கள் அரங்கேறும் என்று மாற்ற வேண்டியது தான். அடுத்த நான்கரை ஆண்டுகள் தமிழகத்துக்கு ஏழரை. மொத்தத்தில் ஜெயாவின் இந்த முடிவு ஆணவத்தின் வெளிப்பாடேயன்றி,ஆதரிக்கத்தக்கதல்ல.

 

நூலகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.  பெரும்பாலான இளைஞர்கள் தேர்வில் "பாஸ்" ஆக வேண்டும் என்ற நோக்கோடுதான் கல்விச்சாலைகளுக்கு செல்கின்றனர். குறிப்புக்களையும் தகவல்களையும் தேடுபவர்கள் சுலபமாக இணைய தளம் மூலமாக தேடிக்கொள்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் நூலகங்கள் சரிவர பராமரிக்கப்பட்டாலே போதும் என்பதுதான் உண்மை நிலை. எப்படியோ, தேவையோ தேவை இல்லையோ, விளம்பரத்திற்காக ஒரு பெரிய நூலகத்தை கட்டியாகி விட்டது. இதனால் பயன் அடைந்தவர்கள் மார்ட்டின் போன்றவர்கள் என்பதும் உண்மைதான். இந்த நிலையில் குழந்தைகள் மருத்துவ மனை உருவாக்க வேண்டுமென்றால் புதிதாக கட்டுவதுதான் சிறந்ததாக இருக்குமே அன்றி இருக்கும் நூலக கட்டிடத்தை மாற்றுவது மற்றவர்கள் குறை காண வழி வகுக்கும்.

 

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது! சிற்றூர் வரை நூலக இயக்கம் போதுமான நிதி ஆதாரத்துடன் துவக்கப் பட்டாலே வளரும்! மற்றபடி அண்ணா, அம்பி நூலகமெல்லாம் வெறும் விளம்பரக் கட்டிடமே! ஊழல் கட்டிடங்களில் சரஸ்வதி குடியிருக்க மாட்டாள்!( சொந்த புத்தகங்களால் தன் வீட்டிலேயே நூலகம் அமைத்து வாசிக்கும் பழக்கமுள்ள ஜெயலலிதா சிந்திப்பாரா? )

 

இந்தியாவிலேயே அதி நவீன வசதிகள் கொண்ட முதல் நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்தான். எட்டு தளங்களைக் கொண்ட இந்நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளுகுளு வசதியோடு கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தின் அனைத்து தளங்களிலும் சுற்றுச் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத சி.எஃப்.எல். விளக்குகள் பொறுத்தப்பட்டுளளன. இளநீலநிற, கண்ணாடி சுவர் வழியே சூரிய வெளிச்சம் முழுமையாக கட்டடத்திற்குள்ளே செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பசுமை கட்டடமாக’ கட்டப்பட்டுள்ளது. இந்நூலகம் மாற்றப்படுவது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் விஜயகாந், மற்றும் சரத்குமார், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஈவிகேஎஸ் இளங்கோவன், சீமான் ஆகியோர்ன் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இவர்கள் (தெளிவாக & ஸ்டெடியாக)? விளக்க வேண்டும். இது இவர்களது மிக முக்கியமான கடமையாகும். செய்வார்களா? "காலின் அளவுக்கு ஏற்ப செருப்பு தைக்கும் அல்லது வாங்கும் நிலை போய், செருப்புக்கு ஏற்ப காலை வெட்டும் காலம் வந்ததே! துக்ளக் தர்பார்!!

 

அராஜகம் ஆ தி மு க ஆட்சி அமைந்ததுமே ஆரம்பம். சமச்சீர் கல்வி ஆரம்பிப்பதில் குளறுபடி, தலைமைச் செயலகம் மாற்றியமைப்பு, பரமக்குடியில் ஆறு பேரை சுட்டுக் கொன்றது, காவல் நிலையம் சென்றவர் விசாரணைக்குப் பின் பலி என்று தொடர்கிறது. இப்போது அண்ணா நூலகம் மருத்துவமனை ஆகிறது. இந்த ஆட்சியில் அனைவரும் மருத்துவமனையில் அல்லது மரணக்கிடங்கில் இருக்க வேண்டியது தானா? ஆட்சியில் அமர்த்திய அருமை மக்களே யோசியுங்கள்…

 

யார் இட்ட சாபமோ நம் மாநிலம் கடந்த 44 ஆண்டுகளாக இந்த இரண்டு தீய சக்திகளிடமும் மாட்டிக்கொண்டு சீரழிந்து வருகிறது!ஆட்சிக்கு வந்து மாதம் ஆறு ஆகியும் ஜெயா மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. இப்போ தேவையில்லாமல் ஒரு நூலகத்தை மூட திட்டமிடுகிறார். அடுத்து என்ன? தமிழகத்தில் கருனைகிழங்கு பயிரிடவோ விற்கவோ தடை செய்ய சட்டமா?? அஇஅதிமுக என்பது "அ[வர்] தி[றப்பதை] இ[வர்] மூ[டுவார்] அ[ம்புட்டுதான்] கழகம்" என்பதின் சுருக்கமா?

Saturday, August 27, 2011

Characteristics of an intelligent man

I was reading a chapter “Science of Self realization” by Srila Prabhupada, founder ISKCON. He narrates an incident: “A small child walking with his father goes on inquiring constantly. He asks his father so many odd things, and the father has to satisfy him with proper answers. When I was a young father in my householder life, I was over flooded with hundreds of questions from my second son, who was my constant companion. One day it so happened that a bridegroom's party was passing our tramcar, and the four-year-old boy, as usual, inquired what the big procession was. He was given all possible answers to his thousand and one questions regarding the marriage party, and finally he asked whether his own father was married! This question gave rise to loud laughter from all the elderly gentlemen present, although the boy was perplexed as to why we were laughing. Anyway, the boy was somehow satisfied by his married father.”

The lesson from this incident is that since a human being is a rational animal (either he is believer of god or atheist), he is born to make inquiries. The greater the number of questions, the greater the advancement of knowledge and science. The whole of material civilization is based on this originally large volume of questions put by young men to their elders. When elderly persons give the proper answers to the questions of the youngsters, civilization makes progress, one step after another. The less intelligent make lesser inquiries, but the questions of those who are more intelligent go higher and still higher. The most intelligent man, however, inquires about what happens after death.