Saturday, April 23, 2011

கண்ணகி கோயில்

வருடத்திற்கு ஒருநாள் மட்டும், அதுவும், குறிப் பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா, சென்ற, ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. மாநாய்க்கன் மகளாய் பிறந்து, மாசாத்துவன் மகனான கோவலனை திருமணம் செய்து கொண்ட கண்ணகி, கணவருக்காக சகலத்தையும் இழந்த போதெல்லாம் பொறுமை காத்தவர். ஆனால், கணவரை இழந்ததும், பொங்கி எழுந்து, அதற்கு காரணமான பாண்டிய நாட்டு மன்னர் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டவர். தன் கற்பின் சக்தியால், மதுரை நகரையே எரித்தவர். இன்றளவும் களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும், கற்பின் தெய்வமாகவும், கற்புக்கரசியாகவும் போற்றப்படுபவர். அவர் நினைவாக, சேர மன்னன் கட்டியதுதான் இந்த மங்கலதேவி கண்ணகி கோவில். தமிழக - கேரள எல்லையில், குமுளி மலையின் உச்சியில்தான் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து பார்த்தால், சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, ரம்மியமான சூழ்நிலையில், தேக்கடி அணையும், தமிழக கிராமங்களும் அழகாக தென்படும்.

சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு, இவ்வளவு உச்சியில் கட்டப்பட்ட இந்த கோவில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. முற்காலத்தில், காட்டு வழியாக நடந்துதான், கோவிலை அடைய முடியும். கடந்த, 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயை அடிப்படையாக வைத்து, பின்னாளில், மொழிவாரியாக எல்லை பிரித்த போது கூட, இந்த கண்ணகி கோவில் தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கேரளா ஒத்துக் கொண்டது. இந்த கோவிலுக்குச் செல்ல, கேரளாவின் குமுளியில் இருந்து, ஜீப்பில், 16 கி.மீ., தூரம் சென்றால்தான், கண்ணகி கோவிலை அடைய முடியும். ஜீப் செல்வதற்காக, எப்போது கேரள அரசு ரோடு போட்டதோ, அப்போது முதல் கண்ணகி கோவில் கேரளாவிற்கு சொந்தம் என்று கூற ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக, வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமியையொட்டி, ஒரு வார காலம் எடுக்கப்பட்ட விழா, கெடுபிடி காரணமாக, மூன்று நாட்களாகி, பின், ஒரே நாளாகி, அதுவும் இந்த வருடம் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மட்டுமே என்று நிர்ணயித்து விட்டனர்.

இந்த ஒருநாள், கண்ணகியின் உருவம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும், தங்குவதற்கும் என்று, பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது; காரணம், கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு.
பழமையான, பாரம்பரியமான, பல்வேறு தமிழ் கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர்களின் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டும். கோவில் மீண்டும் தமிழர்களுக்கே என்று மீட்டு எடுக்க வேண்டும்.

எப்படி செல்வது?

image

இந்த வருடம் என்னுடைய நண்பர்கள் சிலர் அங்கு சென்று வந்தனர்.  முதலில் கம்பம் சென்று, பின்பு கூடலூர், அங்கிருந்து பளியன்குடிக்கு ஆட்டோவிலும் காலை ஐந்தரை மணிக்கு சென்றனர். ஏறுவதற்கு கடினமான மலைமீது ஏற ஆரம்பித்து, சரியாக எட்டரை மணிக்கு கோவிலை அடைந்து, சேரன் செங்குட்டுவனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப் பட்ட கோயிலின் ஒவ்வொரு கல்லையும் தொட்டுணர்ந்து சிலிர்த்துப் போனார்களாம். கம்பத்திலிருக்கும் கண்ணகி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தார்கள். அங்கு வரும் தமிழர்கள் கண்ணகி தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்றும், உரிமை என்றும் பேசுவதை கேட்க முடிந்ததாம். முழுவதும் கேரளா காவல்துறையினரால் நிரம்பியிருந்த அப்பகுதியில் சொற்ப அளவில் இருந்த தமிழக காவல் துறையினரை பார்க்க முடிந்தது. அவர்களும் மக்களை ஒழுங்கு படுத்துவதை விட்டு, கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனராம். நெகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் வயதானவர்கள் கடினமான மலையை கோலூன்றி ஏறி வந்து கண்ணகியை வழிபடுவதுதான். தமிழக அரசோ, தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்களோ இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை என்பது புரிந்த பொது இதயம் வலித்தது.

இதை பற்றி எல்லாம் நம்ம அரசியல் வாதிகளுக்கு எங்க நேரமிருக்கு..? சினிமாவுக்கு கதை வசனம் எழுதவும், பாராட்டு விழாவில் பங்கு பெறுவுமே நேரம் பத்தாது. கண்ணகி கோயில் பற்றிய சர்ச்சை கடந்த ஐம்பது வருடங்களாக உள்ளது. இதுவரையில் யாரும் இதுபற்றி எந்த கோர்ட்டிலும் வழக்கு வில்லை. தமிழனுக்கு இது பற்றி அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை தான் இது பற்றி பேசுகிறார்கள். ஏன் தமிழ்நாடு அரசோ மக்களோ கேஸ் தொடுக்கவில்லை. இது அரசியல் மட்டும். மக்களுக்கு அவசியம் இல்லை என்பதாலே. ...

சரியாகத்தான் சொன்னார்களோ, தமிழ் இனி மெல்லச்சாகும்...

தமிழகம் முழுவதும் மின்சார சப்ளை வெட்டு: சென்னையிலும் இனி ஒரு மணி நேரம் "பவர் கட்'

தமிழகத்தில் வரும் நாட்களில் மின் வெட்டை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, தமிழக மின் வாரியம் கைவிரித்துள்ளது. மின் வெட்டு சரியாகி சகஜ நிலை திரும்ப சில வாரங்களாகும் என்பதால், சென்னையைத் தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் பகலில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்டு அமலில் இருக்கும். அது மட்டுமின்றி, சென்னையிலும் இதுவரை இல்லாத வகையில், இப்போது மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது. தினம் ஒரு மணி நேரம் சென்னையிலும் இனி மின் வெட்டு அமலில் இருக்கும் என, மின் வாரியம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் சீரான மின் வினியோகம் செய்ய முடியாமல், கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் திண்டாடி வருகிறது. இதற்கு தேவையான மின் உற்பத்தி இல்லை என கூறப்பட்டாலும், மின் உற்பத்தி நிலையங்களை சரியாக நிர்வகிக்காதது மற்றும் புதிய மின் திட்டங்களை உரிய வகையில் திட்டமிட்டு துவக்காதது போன்றவையே சரியான காரணங்களாகக் கூறப்படுகின்றன. மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, பிற மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை நிலவுவதால், அங்கிருந்தும் மின்சாரத்தை வாங்க முடியவில்லை. மின் உற்பத்தியில் கணிசமான அளவு பங்களித்து வந்த காற்றாலை மின் உற்பத்தியும் போதிய அளவு இல்லை. பருவ நிலை மாறியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. அடுத்து வரும் மாதங்களில் நிலவும் பருவ நிலை மூலமே காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். அதுவரை மின் பற்றாக்குறை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில், வாக்காளர்களை மனதில் கொண்டு மின் வெட்டைக் குறைத்து அமல்படுத்தி வந்தனர். தற்போது, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், வழக்கம் போல் மின் வெட்டு அமலுக்கு வந்துவிட்டது. மின் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத நிலையில், சென்னை மாநகரிலும், அறிவிக்கப்பட்ட மின் வெட்டு அமலுக்கு வருகிறது. எனவே, மின் பற்றாக்குறையை பொதுமக்கள் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் இடையூறுக்கு வருந்துவதாகவும் மின் வாரியம் கூறியுள்ளது.

நன்றி மின் வாரியம். சென்னை மக்களுக்கும் மின் வெட்டை பற்றி தெரியட்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் கூடங்குளம் பவர் பிளான்ட் ஓபன் ஆனால் தான் மின் வெட்டு தீரும். இதில் இருந்து ஒன்று நன்றாக புரிகின்றது. நம் தமிழகம் கற்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இனி இரவு நேரங்களில் ஒளி கொடுக்க தீ பந்தங்கள்.. காற்றுக்கு பனை விசிறி.. ஒரு இடத்துக்கு செல்ல மாட்டு வண்டி...ஹ்ம்ம்... "ஓட்டு போட்டவர்கள் இருளில்" "ஓட்டு வாங்கி ஜெயித்தவர்கள் பணச் சுருளில்" இது தான் ஜனநாயகமா?

தமிழகத்தின் தற்போது மின் தேவை 12000 மெகாவாட். ஆண்டு தோறும் மின் தேவை 1000 மெகவாட் ஆக உயந்து கொண்டே போகிறது. இதற்கு புதிய தொழில் துவங்குவது மட்டும் காரணம் இல்லை. வீடுகளில் மின் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்துகொண்டே இருக்கின்றது. மேலும் இலவசமாக மின்சாரம் பெரும் பயனாளிகள் தொகை கூடிகொண்டே செல்கின்றது. தற்போதைய மின்சாரம் 8000 மெகாவாட் அளவில் மட்டுமே வழங்கபடுகிறது. பற்றாகுறை 4000 மெகாவாட் ஈடு கட்ட அரசிடம் எந்த திட்டம் இல்லை. இந்த நிலை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து உள்ளது. காற்றாலை மூலம் பெரும் மின்சாரம் சில சமயங்களில் மட்டுமே கை கொடுக்கும். இரு திராவிட கட்சிகளும் இந்த முக்கிய கட்டமைப்பு விசயத்தில் அக்கறை காட்ட வில்லை என்பதே உண்மை. எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல் மின் விசிறி ,கிரைண்டர், மற்றும் மிக்சி மூன்றும் அனைவருக்கும் இலவசமாக வழங்க தேர்தலில் அறிவிப்பு வேறு. தற்போது உள்ள நிலையில் மின் தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் ஒரு தொடர் கதையாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இதற்கு முழு பொறுப்பு தமிழகத்தை தொடர்ந்து ஆண்ட இரு திராவிட கட்சிகளே!!

ஆங்கிலத்தில் ஓர் வாக்கியம் உண்டு "Everything has its own price, but the price need not be necessarily in monetary terms". இலவசத்தின் விலையில் இந்த மின் நெருக்கடியும் அடக்கம். ஓர் சென்னை வாழ் தமிழனாக இந்த அளவேனும் என் மக்களின் துயரில் பங்குக்கொள்ள முடிகிறதே என்ற நிறைவு ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வரசின் செயலற்ற முறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. இன்று சென்னையை நோக்கி நீட்டும் மற்ற தமிழரின் விரல்கள் ஓர் அபாய மணியாகவே நான் கருதுகிறேன். சென்னையில் நீ இவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறாயே என்று யாவரும் கோபப்படவில்லை என் தேவையை பூர்த்தி செய்யாமல் எதற்கு வீண் செய்கிறாய் என்பதே இன்றைய வினா? மக்களின் மின்சார செலவு விலைவாசியப்போல் தான் உயர்வை நோக்கிப்பயணிக்கும். அதுவும் நேற்றைய கம்ப்யூட்டர் இன்று லாப்டாபகவும் நாளைய டாப்லட்டகவும் மாறும் இக்காலத்தில் இது நிச்சயம் பொருந்தும். முதலில் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, தொழிற்க்கூடங்களுக்கு தடையில்லா மின்சாரத்தை அளிக்கவேண்டும். அதே சமயத்தில் மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை செய்தல் வேண்டும்.ஓடிசாவில் உள்ளதைப்போல் மின்சாரவாரியத்தை மூன்றாக பிரித்தல் வேண்டும் "Generation, Transmission and Distribution". இந்த மூன்று பிரிவிற்குள் போட்டியை உருவாக்க வேண்டும். நிலக்கரி மற்றும் பிற raw materials வாங்குவதில் திறம்பட சுதந்திரமாக செயலாற்றும் நிர்வாகம் வேண்டும். Tender முறையை குறைந்த விலையைப்பார்த்து முடிவு செய்வதை தவிர்த்து சிறந்த சேவை மற்றும் value added services பார்த்து முடிவு செய்தல் வேண்டும். தமிழக மின்சாரத் துறைக்கு கடன் வாங்கும் அளவுகோல் நிர்ணயிக்கப்படவேண்டும். இது மட்டும் அன்றி தமிழக மக்கள் இத்துறையின் ஸ்டேக் ஹோல்டர் என்ற முறையில் மாதா மாதம் மின்சாரத் துரையின் செயல்பாடுகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

நான் என்னோட நண்பன்கிட்டே பேசிக்கிட்டே இருந்தேன். அவன் சொன்னான் மச்சான் சென்னைக்கும் ஆப்பு, ஹா ஹா இதை தான் நான் எதிர்பார்த்தேன். இந்த கொடுமையை தான, மற்ற மாவட்டத்தில் இருக்கும் மக்கள் அனுபவித்து வந்தார்கள். சொல்ல போனால், அவரவர்களுக்கு மின்சாரம் தராமல் சென்னைக்கு தந்தார்கள். வீட்டில் AirCon, Water Heaters, Electric Cookers உபயோகம் கூடி விட்டது. இதனை unit மின்சாரம் தாண்டினால், இவ்வளவு ரூபாய் கட்டணும் என்று சொல்ல மட்டும் மூளை இருக்கு, அப்போ அவ்வளவு மின்சாரம் உற்பத்தி வேண்டும் என்று புத்தி இல்லையா? Tidal Park காம், IT Park காம், கார் கம்பெனி யாம், செல் போன் கமபனி யாம் - அய்யா கருணாநிதி, இதெல்லாம் யாருக்கு பிரயோஜனம்? UPS - Generator இருக்குற வீடு, இந்த அக்னி வெயிலில் கொஞ்சம் தப்பிக்கும், ஆனால் அடி தட்டு மக்கள் என்ன செய்வார்கள்? 1760000000000 ஊழல் செய்ய முடியும், ஆனால் 1760000000000 watts மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது. இதுக்கு எதுக்கு மந்திரி, அரசு? உங்கள் தொலை நோக்கு சிந்தனை யை கண்டு, மக்களுக்கு மயக்கம் வருது.

ஒரு நாளைக்கு 50 கோடி ரூபாய்க்கு வாங்குகிறார்களாம் - ஒரு மாசத்திற்கு 1500 கோடி - ஒரு வருடத்திற்கு 30000 கோடி ரூபாய்! இது வருடா வருடம் நடக்கும் கொள்ளைகளில் ( சென்னைக்கு தண்ணீர் விநியோகம், சாலை போடுதல், விவசாயிகள் மானியம் இதுபோல - எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்! ) ஒன்று. நிரந்தர அல்லது நீண்டகால தீர்வை தராத அரசாங்கம் - தொலை நோக்கு திட்டம் இல்லாமல் அன்றாடங்காச்சியாக செயல்படுவது கேவலம். இந்த 30000 கோடி ரூபாயில் 1000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் 25 நிர்மாணம் செய்ய முடியும். பலருக்கு வேலை கிடைக்கும். அதிகப்படியான மின்னுற்பத்தியை வெளிமாநிலங்களுக்கு நல்ல காசுக்கு விற்பனை செய்யயும் முடியும். இப்படி சிந்தித்து, செயல்பட அரசுக்கு மூளை இருக்கிறதா தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இலவசமாக தரப்படும் டி.வி ( கிட்டத்தட்ட 40 மெகாவாட்), கிரைண்டர் ( கிட்டத்தட்ட 400 மெகாவாட் ) போன்றவைகளுக்கு கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது. இதை கணக்கில் எடுத்துக் கொண்டார்களா? எப்போது தான் விடியுமோ?