Monday, January 31, 2011

Q&A with Dr.Devi Shetty (Heart Specialist) on Heart problems, BP, junk food

Q: What is the main cause of a steep increase in heart problems amongst youngsters? I see people of about 30-40 yrs of age having heart attacks and serious heart problems.

Ans: Increased awareness has increased incidents. Also, sedentary lifestyles, smoking, junk food, lack of exercise in a country where people are genetically three times more vulnerable for heart attacks than Europeans and Americans.

Q: Is it possible for a person to have BP outside the normal range of 120/80 and yet be perfectly healthy?

Ans: Yes.

Q: Many of us have an irregular daily routine and many a times we have to stay late nights in office. Does this affect our heart? What precautions would you recommend?

Ans : When you are young, nature protects you against all these irregularities. However, as you grow older, respect the biological clock.

Q: Will taking anti-hypertensive drugs cause some other complications (short / long term)?

Ans : Yes, most drugs have some side effects. However, modern anti-hypertensive drugs are extremely safe.

Q: How would you define junk food?

Ans : Fried food like Kentucky, McDonalds, too many sweets and other deep fried foods.

Q: You mentioned that Indians are three times more vulnerable. What is the reason for this, as Europeans and Americans also eat a lot of junk food?

Ans: Every race is vulnerable to some disease and unfortunately, Indians are vulnerable for the most expensive disease.

Info: Obtained the above excerpt (chat with Dr.Devi Shetty, Heart Specialist – Part 3 of 4) from GemsofWisdom Group.

Saturday, January 29, 2011

உண்மையான கதாநாயகன்: அமிதாப் பச்சன்

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் கௌரவத் தூதுவர் பொறுப்பிலிருந்து, இந்தியாவின் பெருமிதமாகவே கருதப்படும் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்ட சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் (IIFA) பங்கேற்க முடியாது என்று அவர் அறிவித்ததே இதற்குக் காரணம்.

ஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் தயவில் அந்த விழா நடந்தது. அதில் கலந்துகொள்ள வேண்டாம் - என்று மும்பை நகர நாம் தமிழர் கட்சி செயல்வீரர்கள் அமிதாப் பச்சனின் வீட்டுக்குப் போய் முறையிட்டனர். சிங்கள அரசின் இனவெறி அமிதாபின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அடுத்த கணமே, கொழும்பில் நடந்த அந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பொறுப்புடன் அறிவித்தார் அமிதாப். அமிதாபே அப்படி அறிவித்துவிட, பல நடிகர்கள் அவரைப் பின்பற்றி கொழும்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவிக்க நேர்ந்தது.

தமிழ் மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொன்னவுடன் அதைப் புரிந்து கொண்டு, 'இலங்கைக்குப் போகமாட்டேன்' - என்று ஆண்மையோடு அறிவித்ததன் மூலம், தான் ஒரு உண்மையான கதாநாயகன் என்பதை நிரூபித்தார் அமிதாப். தமிழரல்ல என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு மதிப்பளித்ததன் மூலம், தான் உண்மையான மனிதர் என்பதையும் நிரூபித்தார்.

சில நட்சத்திரங்களைப் போல், சமூக அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரட்டை வேடம் போடாமல், துணிவாக முடிவெடுத்ததன் விளைவாகத்தான், ஆண்டுதோறும் நடக்கும் அந்த (IIFA) விழாவின் கௌரவப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவரை நீக்கியதன் மூலம் மதிப்பிழந்து போனது அந்த விழா தானே தவிர, அமிதாப் என்கிற மகத்தான மனிதரல்ல.

சர்வதேச புகழை பெற்றது எந்திரன் திரைப்படம்

 

சர்வதேச அளவில் வசூலைக் குவித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' (தமிழ்ப் பதிப்பு) திரைப்படம், உலகின் வடதுருவம் எனப்படும்.

இது  ஆர்க்டிக் பிரதேசத்தின் த்ராம்ஸோ உலகப் படவிழாவில் (Tromso International Film Festival) இரு தினங்கள் திரையிடப்பட்டுள்ளது.

இதுவரை எந்த இந்தியப் படத்துக்கும் கிடைக்காத மிகப் பெரிய பெருமையாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. த்ராம்ஸோ என்ற நகரம் நார்வேயில் உள்ளது. வட துருவமான ஆர்க்டிக் வட்டத்துக்குள் வரும் பனிப் பிரதேசம் இது. உலகின் மிக தொலைதூரப் பிரதேசம் எனப்படும் இங்கு ஆண்டுக்கொருமுறை 6 தினங்கள் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகப் புகழ் பெற்றது. இந்த விழாவில் தங்கள் படங்கள் திரையிடப்படுவதை பெரும் கவுரவமாகக் கருதுகிறார்கள் படைப்பாளிகள்.

பனிமலைகள் சூழ்ந்த வெட்ட வெளி 'ஸ்னோ தியேட்டரில்' திரைப்படம் பார்க்கும் அற்புத அனுபவத்துக்காக உலகெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் குவிகிறார்கள் த்ராம்ஸோவுக்கு. சராசரியாக 55 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான படங்கள் பங்கேற்கின்றன. 1995-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடக்கும் த்ராம்ஸோ சர்வதேசப் படவிழாவின் இந்த ஆண்டு பதிப்பு ஜனவரி 18-ம் தேதி துவங்கியது.

இந்த விழாவில் இந்தியப் படமாக பங்கேற்றது ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' மட்டுமே. அதுவும் இரண்டு தினங்கள் திரையிடப்பட்ட பெருமை 'எந்திரனுக்கு' மட்டுமே கிடைத்தது. ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்பட்ட 'எந்திரனை' விழாவில் பார்த்த சர்வதேச பார்வையாளர்கள் அசந்துபோய் பாராட்டினார்கள். குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் வசீகரமும் ஸ்டைலும் அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் ஷங்கருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது விழாவில். 'எந்திரனுக்கு' இந்தப் பெருமை கிடைத்ததில் முக்கியப் பங்கு ஐரோப்பிய வாழ் தமிழர் ஒருவரையே சாரும். அவர், 'எந்திரன்' படத்தை நார்வே மற்றும் ஸ்வீடனில் வெளியிட்ட வசீகரன் சிவலிங்கம்.

இந்த விழாவுக்கு பல இந்தியப் படங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், இறுதியில் தேர்வானது வசீகரனால் பரிந்துரைக்கப்பட்ட 'எந்திரனே'. இதுபற்றி வசீகரன் நம்மிடம் கூறுகையில், "தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் உலகில் பெரிய கவுரவத்தைப் பெற்றுத் தந்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த 'எந்திரன்' திரைப்படம். இது சாதாரண திரைப்பட விழா அல்ல. இந்த ஆண்டு 58000 பார்வையாளர்களுக்கும் அதிகமாகப் பங்கேற்றனர்.

நூற்றுக்கும் அதிகமான உலகப் படங்கள் வந்திருந்தன. பல இந்தியப் படங்களைப் பற்றி என்னிடம் தகவல் கேட்டறிந்த த்ராம்ஸோ திரைப்பட விழா குழுவினர், விழாவில் கடைசியில் திரையிட தேர்வு செய்த ஒரே படம் 'எந்திரன்'தான். ஓவர் ட்ரைவ் பிரிவில் 2 தினங்கள் (ஜனவரி 19 மற்றும் 20) திரையிடப்பட்டன. சரியான ரெஸ்பான்ஸ் பார்வையாளர்களிடமிருந்து. 'எந்திரன்' ஒரு நிஜமான சர்வதேசப் படைப்பு என்பதற்கான அங்கீகாரம் இது", என்றார்

நன்றி: http://www.viduppu.com

Monday, January 3, 2011

சூப்பர் ஆபர்: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்

திருப்பூரில் பண்டிகையை கொண்டாடும் "குடிமகன்'களை குஷிப்படுத்த, இலவசங்கள் என்ற அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; மதுக்கடை பாரில் சரக்கு விற்பனையை அதிகரிக்க, இத்தகைய யுக்தி கையாளப்படுகிறது.

புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில், ஜவுளிக் கடைகள், பர்னிச்சர், நகைக்கடைகளில் வழக்கமாக இலவசங்களும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்படும். விற்பனையை அதிகரிக்க, இதுதொடர்பான போஸ்டர் ஒட்டப்பட்டு, நோட்டீஸ்களும் மக்களுக்கு வினியோகிக்கப்படும். திருப்பூரில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில், குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வகைகளை வாங்கும் "குடிமகன்'களுக்கு, இலவசங்களை தருவதாக அறிவித்து, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது, இது, "குடிமகன்'களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பின்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள பார் ஒன்றில் இத்தகைய சலுகை அளிக்கப்படுகிறது. அவர்கள் வினியோகிக்கும் நோட்டீசில், "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டம்; உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; காலை 11 முதல் மாலை 5 மணி வரை மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்; இரண்டு லார்ஜ் வாங்கினால் ஒரு லார்ஜ் இலவசம்; ருசியான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளுடன்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கலால் மாவட்டத்தில், ஒரு மாதத்துக்கு சராசரியாக 65 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடந்து வருகிறது; பண்டிகை காலங்களில், கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் வரை சரக்கு விற்பனை எகிறும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என 20 நாட்களுக்குள் மூன்று பண்டிகை தினங்கள் தொடர்ந்து வருவதால், திருப்பூரில் சரக்கு விற்பனையில் முன்னிலை பெற "குடிமகன்'களை கவரும் வகையில், இலவசம் அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

என் கருத்து…

  • சூப்பர் ஆபர்...
  • இது ரொம்ப மோசம். யாருக்குமே சமூகத்தை பற்றிய அக்கறை சிறிது கூட இல்லையா....
  • நம்ம நாட்டை ரொம்ப நல்ல டெவலப் பண்றன்கப்பா,,,,,,,,,,,,,,...

Sunday, January 2, 2011

அமைச்சர் விழாவில் ஒரு ஜிலேபிக்காக கால் கடுக்க நிறுத்தப்பட்ட பிஞ்சுகள்

கோவை: அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் ஒரு ஜிலேபிக்காக, பள்ளிக் குழந்தைகள்ஒரு மணி நேரம் கால் கடுக்க நிற்க வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 34ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச பொங்கல் பொருட்கள், இலவச வேட்டி சேலைவழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான துவக்கவிழா, புலியகுளம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நேற்று நடந்தது.கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார்.

நன்றி: தினமலர்

கால் கடுக்க நின்ற சிறுவர்கள்:இந்த விழா, நேற்று காலை 10.00 மணிக்கு துவங்கியது. விழா நடந்த பள்ளியில் உள்ளஉண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 20 பேர், விழா துவங்குவதற்கு முன்பே மேடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் இருவரைத்தவிர, அனைவரும் 10 வயதுக்குட்பட்ட இளம் சிறுவர்கள். இலவச வேட்டி, சேலை மற்றும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் விழாவுக்கும் அவர்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை. இருப்பினும் அவர்களைஅங்கு நிறுத்தியதற்கான காரணம் யாருக்கும் புரியவில்லை. அவர்களை விசாரித்தபோது, அமைச்சர் கொடுக்கப்போகும் ஒரு"ஸ்வீட்'டுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. எப்போது "ஸ்வீட்'கிடைக்குமென்ற ஏக்கத்துடன் அந்த மாணவர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகநின்றனர்.

கால் கடுக்க அவர்கள் நிற்பது தெரிந்தோ, தெரியாமலோ அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ., கோவைத்தங்கம் என வரிசையாக "மைக்' பிடித்து முழங்கிக்கொண்டிருந்தனர். எல்லோரும் பேசிமுடித்து, பயனாளிகளுக்கு பொருட்கள்வழங்கும் வரையிலும், அந்தச் சிறுவர்களுக்குத் தருவதற்கான "ஸ்வீட்' வாங்கப்படவில்லை. காத்துக் கிடந்த சிறுவர்கள்ஏமாற்றமடைவர் என்பதைக் கூட, அங்கிருந்த யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

புத்தாண்டு தினத்தில் அவர்களுக்குஏமாற்றமாகி விடும் என்பதை உணர்ந்தஆசிரியை ஒருவர், "சார், ஸ்வீட் வாங்கிட்டீங்களா, அமைச்சர் கொடுக்கிறாரா'என்று ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டிருந்தார். அவர்கள் யாரும் முறையாக பதில் கூறாததால், கடைசியாக அந்தபொங்கல் பொருட்களையாவது அந்தச்சிறுவர்களுக்குக் கொடுங்கள் என்றும்கெஞ்சிப் பார்த்தார்.அதிகாரிகளோ, "சும்மா இரும்மா.பொங்கல் பொருட்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்' என மறுத்துவிட்டனர். அந்த ஆசிரியை "அமைச்சரை ஒருவாழ்த்தாவது சொல்லச் சொல்லுங்கள்'என்று மன்றாடினார். அதற்குள் விழாமுடிந்தது. ஸ்வீட் இல்லாததால் அதிகாரிகள் கையைப்பிசைந்து கொண்டிருந்தனர்.

மேடையில் இருந்து இறங்கிய அமைச்சர்பழனிசாமி, குழந்தைகளையும், அதிகாரிகளையும் பார்த்தார்.அதிகாரிகள் எதுவும் சொல்லாததால்,ஒரு குழந்தையின் தோளில் தட்டி "சரி வருகிறேன்' எனக்கூறி விட்டுச் சென்று விட்டார். அவராகவும் ஒரு வாழ்த்தும் கூடசொல்லவில்லை. இதனால், அந்தச் சிறுவர்களின் முகங்கள், ஏமாற்றத்தில் சுருங்கின. அவர் சென்ற பின், அவசர அவசரமாக சில ஜிலேபிகளை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்கள்; அதுவும் 2மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அந்த வேதனைக் காட்சியின் உச்சக்கட்டம்.

என் கருத்து…

  • நன்றி கெட்டவர்களும் மனிதாபிமானமும் இல்லாதவர்கள் இந்த அரசியல் வாதிகள் நடக்கும் எல்லாவற்றிருக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் காலத்திற்கு என்பதை யாரும் மறக்க கூடாது...
  • மனித மதிப்பை உணராத மாண்புமிகு எதற்கு. முதலில் தலைமை பண்பை கற்று கொள்ளுங்கள். பிறகு தலைமை தாங்க செல்லுங்கள்....... இந்த மந்திரிகளை ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வைக்க வேண்டும்!...
  • அந்த விழா,அமைச்சர், தாங்கள் நிற்கும் காரணம் எதையும் மாணவர்கள் முழுமையாக உணந்திருக்கும் வாய்ப்பில்லை. இன்னும் நாம் மாணவர்களையும் ,சிறுவர்களையும் நடத்தும் முறையில் மிக மிக பின் தங்கியுள்ளது வெளிப்படுகிறது. மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் தயவு செய்து இது போன்ற செய்திகளை படித்துவிட்டு தங்களது நிகழ்சிகளில் இதுபோல மனதை வேதனை படுத்தும் சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்....
  • இது போன்ற நிகழ்வுகள் பல கல்வி நிறுவனகளில் நடை பெற்று வருகிறது என்பது உண்மை. வரும் VIP ய் குளிர்விக்க மாணவர்களை ஆட, பாட, மாஸ்டிரில் போன்று இன்னும் பல குரங்காட்டி வித்தைகளை மாணவர் மீது தினிகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு, தங்கள் கல்வி என்ற பெயரில் நடத்தும் வியாபார நிறுவனகளுக்கு தேவையானதை அடைகின்றனர். சிறிது யோசித்து பாருங்கள், இதனால் மாணவர்களுக்கு என்ன நன்மை? அவர்களை அடிமைகளாக, சர்கஸ் விலங்குகளை போல் மற்றுகிறோமே தவிர வேறு பலன் இல்லை....