Monday, January 3, 2011

சூப்பர் ஆபர்: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்

திருப்பூரில் பண்டிகையை கொண்டாடும் "குடிமகன்'களை குஷிப்படுத்த, இலவசங்கள் என்ற அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; மதுக்கடை பாரில் சரக்கு விற்பனையை அதிகரிக்க, இத்தகைய யுக்தி கையாளப்படுகிறது.

புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில், ஜவுளிக் கடைகள், பர்னிச்சர், நகைக்கடைகளில் வழக்கமாக இலவசங்களும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்படும். விற்பனையை அதிகரிக்க, இதுதொடர்பான போஸ்டர் ஒட்டப்பட்டு, நோட்டீஸ்களும் மக்களுக்கு வினியோகிக்கப்படும். திருப்பூரில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில், குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வகைகளை வாங்கும் "குடிமகன்'களுக்கு, இலவசங்களை தருவதாக அறிவித்து, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது, இது, "குடிமகன்'களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பின்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள பார் ஒன்றில் இத்தகைய சலுகை அளிக்கப்படுகிறது. அவர்கள் வினியோகிக்கும் நோட்டீசில், "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டம்; உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; காலை 11 முதல் மாலை 5 மணி வரை மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்; இரண்டு லார்ஜ் வாங்கினால் ஒரு லார்ஜ் இலவசம்; ருசியான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளுடன்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கலால் மாவட்டத்தில், ஒரு மாதத்துக்கு சராசரியாக 65 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடந்து வருகிறது; பண்டிகை காலங்களில், கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் வரை சரக்கு விற்பனை எகிறும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என 20 நாட்களுக்குள் மூன்று பண்டிகை தினங்கள் தொடர்ந்து வருவதால், திருப்பூரில் சரக்கு விற்பனையில் முன்னிலை பெற "குடிமகன்'களை கவரும் வகையில், இலவசம் அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

என் கருத்து…

  • சூப்பர் ஆபர்...
  • இது ரொம்ப மோசம். யாருக்குமே சமூகத்தை பற்றிய அக்கறை சிறிது கூட இல்லையா....
  • நம்ம நாட்டை ரொம்ப நல்ல டெவலப் பண்றன்கப்பா,,,,,,,,,,,,,,...

No comments:

Post a Comment