மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் அடிபட்டு, தீவிர சிகிச்சையில் உள்ள கல்லூரி மாணவரை காப்பாற்ற, அனைத்து கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டுகின்றனர்.
மதுரை மாவட்டம் குமாரம் அருகே வடுகபட்டி விவசாயி திருமால் மகன் கவுதம்(20). வேலம்மாள் பொறியியற் கல்லூரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். இவரது சக மாணவர் மற்றொரு கவுதம்(20). இவரும் வடுகபட்டி பகுதியைச் சேர்ந்தவர். தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தனர். அக்.,11ல் கல்லூரி செல்ல ரிசர்வ்லைன் பகுதியில் (ஹெல்மெட் அணியவில்லை – this is bad) வந்தனர். அப்போது அரசு டவுன் பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கவுதம் பலியானார்.
காயமடைந்த திருமால் மகன் கவுதம், மூளையில் அடிபட்டு வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தொடர் சிகிச்சைக்கு 9 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், சக கல்லூரி மாணவர்கள் இருநாட்களில் 1.48 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்தனர். இதை கேள்விபட்ட மற்ற கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களிடம் கிடைத்ததை "பறிக்கும்' இக்காலத்தில், ஒரு உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட் டுள்ள மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியது. பொதுமக்களும் உதவ விரும்பினால், மேலும் விவரங்கள் அறிய 97860 88818, 99445 90405 ல் தொடர்பு கொள்ளலாம்.
This reminds my college days at Madurai, when we tried joined for two of such causes. Now both are fit and living along with us. Good work guys anyway…
No comments:
Post a Comment