Saturday, May 30, 2009

India’s GDP @ 6.7% - மந்த நிலையிலும் இந்தியா சாதனை ஒட்டுமொத்த உற்பத்தி 6.7%

சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை நிலவியபோதிலும் கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.7 சதவீதத்தைத் தொட்டுள்ளது.

தொழில்துறை உற்பத்தி 5.8 சதவீதமாக சரிந்தபோதிலும் நாட்டின் ஜிடிபி 6.7 சதவீதத்தை எட்டியுள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.

சர்வதேச அளவில் தேக்க நிலை நிலவியபோதிலும் இந்தியாவின் ஜிடிபி முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைந்த போதிலும் அது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறப்பான அளவாகவே உள்ளது. பிற நாடுகளில் ஒட்டுமொத்த உற்பத்தி 2 சதவீத அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

நான்காம் காலாண்டில் உற்பத்தித் துறை வளர்ச்சி 1.4 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் உற்பத்தித் துறை 6.3 சதவீத அளவுக்கு வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டில் தொழில்துறை உற்பத்தி 2.4 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் தொழில்துறை உற்பத்தி 8.2 சதவீதமாக இருந்தது.

2007-08-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவாக 9 சதவீதத்தை எட்டியது. அந்த ஆண்டில் நான்காம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 8.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதி ஆண்டில் (2008-09) ஒட்டுமொத்த உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் அது சற்று குறைந்து 6.7 சதவீதமாக உள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சற்று குறையும் என்று எதிர்பார்த்ததாக மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

விவசாயம் மற்றும் அது சார்ந்த துறையின் வளர்ச்சி 1.6 சதவீதமாகும். முந்தைய ஆண்டில் இது 4.9 சதவீதமாக இருந்தது.

உற்பத்தித்துறை வளர்ச்சி 8.2 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும் உற்பத்தித் துறை வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டில் இத்துறை 10 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment