Saturday, May 30, 2009

பிரித்தானியாவில் 12 நாளாக ரிம் மார்ட்டினின் இனம் கடந்த பட்டினி போராட்டம்

தமிழினம் படும் துன்பங்களை நேரில் கண்ட ரிம் மார்ட்டின் அவர்கள் 4 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்றுடன் 12 ஆவது நாளாக உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழினத்தின் நாட்டை அங்கீகரிக்க ஒரு நாடு இல்லை என்ற போதிலும் பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான மக்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் 10 வரையிலான தமிழீழத் தேசியக் கொடி பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தை அலங்கரித்துள்ளது.

தமிழினம் படும் துன்பங்களை நேரில் கண்ட ரிம் மார்ட்டின் அவர்கள் 4 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்றுடன் 12 ஆவது நாளாக உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை பாதிப்படையும் போதிலும் தமிழர்களுக்காக முன்னெடுக்கும் இந்த உன்னத தியாக போராட்டத்தை தளராத மன உறுதியுடன் தொடர்கின்றார்.

இதேவேளை இன்று (30.05.09) காலை பிரித்தானியாவின் பிரதம ஊடகங்கள் ஆன Sunday observer மற்றும் Times ஆகியன சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையின் போது காணாமல் போனவர்கள், இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை நாடாளுமன்ற சதுக்கத்தில் நேரடியாக வந்து சேகரிக்க இருப்பதால் பாதிக்கப்பட்ட உங்கள் உறவினர்களின் புகைப்படங்களை எடுத்து வந்து இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்தும் படி தாழ்மையாக கேட்டுகொள்கின்றனர் பிரித்தானிய தமிழ் இளையோர்கள்.

The Times பத்திரிகையின் நேற்றைய பிரதியில் சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இனப்படுகொலை தொடர்பான செய்திகள் வெளியானது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடகங்களின் வருகையை முன்னிட்டு தமிழ் இளையோரால் கவனயீர்ப்பு தெரு நாடகம் ஒன்று நாளை நாடாளுமன்ற சதுக்கத்தில் நிகழ்த்தப்படவுள்ளது.

தமிழ் மக்களின் அவலத்தை ஊடகங்கள் மூலம் வெளிக்காட்டுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாளை நாடாளுமன்ற சதுக்கத்தை நிறைக்கும்படி வேண்டுகின்றனர் இளையோர்கள்.

 

 

 

 

No comments:

Post a Comment