Wednesday, July 27, 2011

சமச்சீர் கல்வியும் & தமிழ் நாட்டின் சாபங்களும்

 

முன்னாள் முதல்வர் கருணாநிதி 5 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு சம்பாதித்த கெட்ட பெயரை, ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே பெற்றுவிட்டார் புரட்சித் தலைவி. சமச்சீர் கல்வி முறை தமிழகத்துக்குத் தேவையா? இல்லையா? என்கிற காலக்கட்டத்தையெல்லாம் தாண்டி இப்போது தினமும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லித் தருவீர்களா? மாட்டீர்களா? என்று கேள்வி கேட்கும் நிலைமைக்குத் தள்ளிவிட்டார் ஜெயலலிதா. சமச்சீர் கல்வி புத்தகங்களில் இருக்கும் கருணாநிதியின் கவிதைகள்தான் ஜெயல்லிதாவுக்கு உறுத்தல் என்றால் அந்த ஒன்றை மட்டும் நீக்கிவிட்டு மீதமுள்ளவற்றை அப்போதே அனுமதித்திருக்கலாம்..!

கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்ற நோக்கிலேயே இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்கொண்டது தவறானது. ஒரு ஆட்சி போய் மறு ஆட்சி வந்தால் ஊழலை தோண்டலாம்.. துருவலாம்.. அதனால் பாதிப்பு இல்லை.. ஆனால் மக்களின் அடிப்படையான ஒரு விஷயத்தில்.. அதுவும் மாணவர்களின் படிப்பு சம்பந்தமான விஷயத்தில் இந்த அளவுக்கு ஜெயல்லிதா விளையாடியது கொடூரமானது.. பள்ளிக் குழந்தைகள் படிக்காமல் இருப்பதற்கான சூழல்கள் தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே வரும் இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை ஒரு மாதம் முழுவதும் அமைதி காத்திருக்க வைத்து, பின்பு அடுத்த 8 மாதங்களில் அனைத்துப் பாடங்களையும் படிக்க வைப்பது எவ்வளவு கடினம் என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும்.. இந்தப் பதைபதைப்பில் தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக இதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஏற்கெனவே 250 கோடிக்கு அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களை ஓரமாகத் தூக்கியெறிந்துவிட்டு, பழைய புத்தகங்களை அச்சடிக்க அவசரம், அவசரமாக 100 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியிருப்பது எவன் என்னைக் கேட்பான்..? யாருக்கு அந்த தகுதி இருக்கு? என்கிற ஆணவம்தான் காரணமேயன்றி, வேறு எதுவுமே இல்லை.. ஜெயலலிதா முன்பெல்லாம் தனது பேச்சில் ஆணவத்தையும், கர்வத்தையும் காட்டுவார்.

இப்போது மீடியாக்களின் முன்பு அமைதியாகி, சாந்த சொரூபியாகி, உள்புறம் மட்டும் தனது வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வேகத்தை, கோபத்தை மாநிலம் முழுவதும் நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது செயல்படுத்தினால் ஊர், ஊருக்கு அவருக்குக் கோவில் கட்ட அப்பாவி தமிழர்கள் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு அத்தனை பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பரிதவிக்கும் செயலாக இப்படியொரு முட்டாள்தனத்தை செய்யும் இவரை திருத்துவது எப்படி..? பத்தடி தூரம் தள்ளி நின்று வாய் பொத்தி, நேர் பார்வையில்லாமல் அடிமைத்தனத்தில் வாழும் அமைச்சர்களைப் பார்க்கின்றபோது நாம் யாரிடம் போய் இதைச் சொல்லி அழுவது என்றுதான் தெரியவில்லை.. தனிப்பட்ட ஈகோக்களை அரசு விஷயத்திலும், ஆட்சி விவகாரத்திலும் பயன்படுத்த்துதல் நல்ல அரசனுக்கு அழகல்ல.. உயர்நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி கேட்டு இடைக்காலத் தடை கொடுத்தபோதே மாணவர்களின் நிலைமை கருதி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை வாபஸ் பெற்று பழையபடி சமச்சீர் கல்வியை அமல்படுத்தியிருந்தால் மாநிலமும், கோர்ட் வட்டாரமும் இன்றைக்கு ஜெயல்லிதாவை புகழ்ந்திருக்கும்.. ‘மாணவர்கள் நாட்டின் வளமான எதிர்காலம். அரசு அதை கருத்தில் கொண்டு உத்தரவை உடனே அமல்படுத்தும் என்று நம்புகிறோம்’ என்று தீர்ப்பின் இறுதியில் வேண்டுகோள் வைத்துள்ளது உயர்நீதிமன்றம். இதன் தீர்ப்பில் தமிழக அரசு நியமித்த கமிட்டியின் சிபாரிசுகளைவிட, அக்கமிட்டியையே நிராகரித்த நீதிபதிகளின் உத்தரவை நான் மிகவும் உயர்வாக நினைக்கிறேன்..! அந்தக் கமிட்டியில் இருந்தவர்களுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் என்ன தொடர்பு..? கல்வியை விற்பனை செய்பவர்களை, அதுவும் தனக்குச் சாதகமாக கருத்துச் சொல்வார்கள் என்று உடன்படிக்கை செய்தேதான் இந்தக் கமிட்டியை நியமித்த்து வெட்டவெளிச்சம்..!

உச்சநீதிமன்றத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரிக்கப்படும். தீர்ப்பு வழங்க பத்து நாட்களாகும். இத்தனை நாட்கள் பொறுத்த மாணவர்கள் இன்னுமொரு பத்து நாட்கள் பொறுக்க மாட்டார்களா என்று ஆத்தா நினைக்கிறார். ஒருவேளை அங்கேயும் எதிர்ப்பாகவே தீர்ப்பு வந்துவிட்டால் அகிலம் போற்றும் அங்கயற்கண்ணி என்ன செய்வாரோ..? கருப்புப் போர்வையை போர்த்திக் கொண்டு தினமும் கோட்டைக்கு வந்து செல்வாரா? அல்லது மீண்டும் ஏதாவது ரகளைதான் செய்வாரா? யாருக்குத் தெரியும்..? ஆத்தாவின் குணம் எப்போதும் ஒன்றுபோல் இருந்த்தில்லை. அமாவாசைக்கும், பெளர்ணமிக்கும் ஆடி அடங்கும் அலைகளைப் போல இவரது செயல்களும், பேச்சுக்களும் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன.. சென்னை உயர்நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பில் ஒரு அம்சம் மட்டுமே குறையாக உள்ளது. மேலும் சேர்க்க வேண்டிய பாடங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் 3 மாதங்களுக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளது. இந்த ஒரு அனுமதியை வைத்து மீண்டும் 3 மாதங்கள் கழித்து பத்து பாடங்களை சேர்த்துக் கொடுத்தால் என்னாகும்..? படிப்புச் சொல்லித் தர வேண்டியது ஆசிரியர்களின் கடமை என்றாலும், அதற்கு நேரம், கால அவகாசம் தர வேண்டாமா..? நீதிமன்றம் இந்த வரிகளைக் குறிப்பிட்டிருக்கவே தேவையில்லை..! நாம்தான்.. நன்கு தெரிந்துதான், கண்ணைத் திறந்து கொண்டு பார்த்தநிலையில்தான் ஆத்தாவை கோட்டையில் கொலுவேற்றியிருக்கிறோம். என்ன நடந்தாலும், எது நடந்தாலும் வேறு வழியில்லாமல் இந்தக் கொடுமையையும் இன்னமும் 5 ஆண்டுகளுக்கு நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும்..!...

தமிழக அரசின் வழக்கறிஞர் அடுத்த வருடத்தில் சமச்சீர் கல்வி கொண்டு வர வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்... வாய்ப்பு என்று சொல்வதின் அர்த்தம் என்ன....வரலாம்...வரமாலும் போகலாம்....நான் ஏற்கனவே சொன்னபடி.....தனது பரம்பரை சொந்தங்கள் முலம் உச்ச நிதிமன்றத்தில் ஜெயலத தனது விருப்பபடி தீர்ப்பை பெற்றால்....சமசீர் கல்விக்கு நிரந்தர முடு விழதான்.....அது ஒரு வறட்டு பிடிவாதம் மற்றும் பரம்பரை சொந்தங்கள் நினைத்தால் எந்த அநிதியும் நியாயபடுத்த முடியும் என்பதின் சான்றாக அமையும்......இதில் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோரும்...தன் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளுடன் ஒரே பட திட்டத்தை படிப்பதா என்கிற big briother attitude நோக்கில் இதை பார்கிறார்கள் என்பதும் உண்மை....இதில் கொடுமை என்ன வென்றால் அந்த மெட்ரிக் பாட திட்டத்தை படிக்கும் பிள்ளைகள் இரண்டு சதவிதம் தான்........அதை விட கொடுமை அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் இந்த சமச்சீர் கல்வியால் பயன் பெறபோவது தமிழ் வழி பயலும் தங்கள் பிள்ளைகளும்தான் என்று புரியாமல் இதை எதோ ஜெயலலிதாவின் வெற்றி தோல்வியாக பார்பத்துதான்......ஆனால் அவரோ குழைந்தைகள் படிப்பு இரண்டு மாதமாக வீணாகிறது என்கிற கவலை துளியும் இன்றி பிடிவாதம் ஒன்றே இலக்கு தனது என்று இருக்கிறார்....

தைரியமான முடிவுகளை எடுப்பதில் கருணாநிதியை விட ஜெயா கிரேட் எனலாம். ஆனால் பொதுநலம் என்று வரும்போது கூட பிடிவாதம் பண்ணுவது ... மஹா பாவம் என்பதை ஜெயா உணரவேண்டும் கடந்த கால தவறுகளை செய்யமாட்டோம் என உறுதி அளித்துவிட்டு தப்பு செய்தால் அடுத்த எலெக்சன் மீண்டும் பாடம் புகட்டும் ஜாக்கிரதை...

கல்விக்காக இந்த அம்மையாரிடம் கெஞ்சவேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டதை நினைத்து வருந்துவதா அல்லது இப்படியும் கல்வியை அரசியலாக்கிவிட்ட அற்பர்களை நினைத்து என்ன செய்வது.? இந்த இரண்டு கூட்டங்களுமே தமிழ் நாட்டின் சாபங்கள்....

No comments:

Post a Comment