கோவை: அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் ஒரு ஜிலேபிக்காக, பள்ளிக் குழந்தைகள்ஒரு மணி நேரம் கால் கடுக்க நிற்க வைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 34ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச பொங்கல் பொருட்கள், இலவச வேட்டி சேலைவழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான துவக்கவிழா, புலியகுளம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நேற்று நடந்தது.கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார்.
நன்றி: தினமலர்
கால் கடுக்க நின்ற சிறுவர்கள்:இந்த விழா, நேற்று காலை 10.00 மணிக்கு துவங்கியது. விழா நடந்த பள்ளியில் உள்ளஉண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 20 பேர், விழா துவங்குவதற்கு முன்பே மேடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் இருவரைத்தவிர, அனைவரும் 10 வயதுக்குட்பட்ட இளம் சிறுவர்கள். இலவச வேட்டி, சேலை மற்றும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் விழாவுக்கும் அவர்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை. இருப்பினும் அவர்களைஅங்கு நிறுத்தியதற்கான காரணம் யாருக்கும் புரியவில்லை. அவர்களை விசாரித்தபோது, அமைச்சர் கொடுக்கப்போகும் ஒரு"ஸ்வீட்'டுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. எப்போது "ஸ்வீட்'கிடைக்குமென்ற ஏக்கத்துடன் அந்த மாணவர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகநின்றனர்.
கால் கடுக்க அவர்கள் நிற்பது தெரிந்தோ, தெரியாமலோ அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ., கோவைத்தங்கம் என வரிசையாக "மைக்' பிடித்து முழங்கிக்கொண்டிருந்தனர். எல்லோரும் பேசிமுடித்து, பயனாளிகளுக்கு பொருட்கள்வழங்கும் வரையிலும், அந்தச் சிறுவர்களுக்குத் தருவதற்கான "ஸ்வீட்' வாங்கப்படவில்லை. காத்துக் கிடந்த சிறுவர்கள்ஏமாற்றமடைவர் என்பதைக் கூட, அங்கிருந்த யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
புத்தாண்டு தினத்தில் அவர்களுக்குஏமாற்றமாகி விடும் என்பதை உணர்ந்தஆசிரியை ஒருவர், "சார், ஸ்வீட் வாங்கிட்டீங்களா, அமைச்சர் கொடுக்கிறாரா'என்று ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டிருந்தார். அவர்கள் யாரும் முறையாக பதில் கூறாததால், கடைசியாக அந்தபொங்கல் பொருட்களையாவது அந்தச்சிறுவர்களுக்குக் கொடுங்கள் என்றும்கெஞ்சிப் பார்த்தார்.அதிகாரிகளோ, "சும்மா இரும்மா.பொங்கல் பொருட்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்' என மறுத்துவிட்டனர். அந்த ஆசிரியை "அமைச்சரை ஒருவாழ்த்தாவது சொல்லச் சொல்லுங்கள்'என்று மன்றாடினார். அதற்குள் விழாமுடிந்தது. ஸ்வீட் இல்லாததால் அதிகாரிகள் கையைப்பிசைந்து கொண்டிருந்தனர்.
மேடையில் இருந்து இறங்கிய அமைச்சர்பழனிசாமி, குழந்தைகளையும், அதிகாரிகளையும் பார்த்தார்.அதிகாரிகள் எதுவும் சொல்லாததால்,ஒரு குழந்தையின் தோளில் தட்டி "சரி வருகிறேன்' எனக்கூறி விட்டுச் சென்று விட்டார். அவராகவும் ஒரு வாழ்த்தும் கூடசொல்லவில்லை. இதனால், அந்தச் சிறுவர்களின் முகங்கள், ஏமாற்றத்தில் சுருங்கின. அவர் சென்ற பின், அவசர அவசரமாக சில ஜிலேபிகளை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்கள்; அதுவும் 2மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அந்த வேதனைக் காட்சியின் உச்சக்கட்டம்.
என் கருத்து…
- நன்றி கெட்டவர்களும் மனிதாபிமானமும் இல்லாதவர்கள் இந்த அரசியல் வாதிகள் நடக்கும் எல்லாவற்றிருக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் காலத்திற்கு என்பதை யாரும் மறக்க கூடாது...
- மனித மதிப்பை உணராத மாண்புமிகு எதற்கு. முதலில் தலைமை பண்பை கற்று கொள்ளுங்கள். பிறகு தலைமை தாங்க செல்லுங்கள்....... இந்த மந்திரிகளை ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வைக்க வேண்டும்!...
- அந்த விழா,அமைச்சர், தாங்கள் நிற்கும் காரணம் எதையும் மாணவர்கள் முழுமையாக உணந்திருக்கும் வாய்ப்பில்லை. இன்னும் நாம் மாணவர்களையும் ,சிறுவர்களையும் நடத்தும் முறையில் மிக மிக பின் தங்கியுள்ளது வெளிப்படுகிறது. மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் தயவு செய்து இது போன்ற செய்திகளை படித்துவிட்டு தங்களது நிகழ்சிகளில் இதுபோல மனதை வேதனை படுத்தும் சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்....
- இது போன்ற நிகழ்வுகள் பல கல்வி நிறுவனகளில் நடை பெற்று வருகிறது என்பது உண்மை. வரும் VIP ய் குளிர்விக்க மாணவர்களை ஆட, பாட, மாஸ்டிரில் போன்று இன்னும் பல குரங்காட்டி வித்தைகளை மாணவர் மீது தினிகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு, தங்கள் கல்வி என்ற பெயரில் நடத்தும் வியாபார நிறுவனகளுக்கு தேவையானதை அடைகின்றனர். சிறிது யோசித்து பாருங்கள், இதனால் மாணவர்களுக்கு என்ன நன்மை? அவர்களை அடிமைகளாக, சர்கஸ் விலங்குகளை போல் மற்றுகிறோமே தவிர வேறு பலன் இல்லை....