மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `புத்தகம் படி பரிசைப்பிடி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றால் போதும் புத்தகங்களை பரிசாக வெல்லலாம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் பொது அறிவு, இலக்கியம் எல்லாவற்றிலும் புலமை பெற்றவராக இருக்க வேண்டும்.
நிகழ்ச்சியில் பங்கேற்பவரிடம் ஒரு கேள்வி கேட்பார். அதற்கு நான்கு பதிலும் தருவார். அதிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுத்து சொன்னால் ஒரு புத்தகம் பரிசாக கிடைக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒவ்வொரு புத்தகம் பரிசு.
கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லி கைநிறைய புத்தகங்களை பரிசாக அள்ளிச் செல்லும் இந்த நிகழ்ச்சியை நடத்துபவர் இ.மாலா. புத்தகம் படி பரிசைப்பிடி நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
No comments:
Post a Comment