சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் மலர் கண்காட்சி லால் பாக் தோட்டத்தில் நேற்றுத் துவங்கியது.
பெங்களூரில் உள்ள லால்பாக் தோட்டத்தில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில், துவங்கும் இந்த மலர் கண்காட்சி நேற்றுத் துவங்கியது. வண்ண வண்ண மலர்களுடன் பூத்துக் குலங்கும் இந்த மலர் கண்காட்சியில், மலர்களைக் கொண்டு விதவிதமான வடிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் ஒரு வார காலமே இருக்கும் இந்த மலர் கண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் லால் பாக் தோட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். ரோஜாக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அழகிய உருளைகள், கோபுரங்கள், உயிரின வடிவங்கள் என லால் பாக் முழுவதும் கண்களைப் பரிக்கும் வகையில் அமைந்துள்ளன. அதில் பல வண்ண மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட குதுப்மினார் கோபுரம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment