இப்போது தான் இந்த படம் பார்த்தேன். என் விமர்சனம் இதோ.
இன்டர்நெட் மற்றும் கைத் தொலைபேசி இல்லாத காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால், இந்தப் படத்தில் கடிதங்களுக்கு அதிக முக்கியத்துவமும், அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையிலும் படமாக்கி உள்ளார் சேரன்.
இந்தப் படத்தில் மீண்டும் சேரனுடன் இணைந்துள்ளார் பத்மப்ரியா. இவருடன் பெங்காலி நடிகை ரூமி இன்னொரு நாயகியாக நடிக்கிறார். விஜயகுமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
நேமிச்சந்த் ஜெபக் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சபேஷ் முரளி இசையமைத்து உள்ளனர்.
மனதில் எப்போதும் பொக்கிஷமாய் தங்கிவிடும் சில இனிய நினைவுகளின் தொகுப்பே இந்த பொக்கிஷம் என்கிறார் சேரன்.
இனிய நினைவுகளாய் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகர் மனதிலும் தங்கும் என்பதில் ஐயம் இல்லை.
காதலர்களுக்கு ஏற்ற படம். குடும்பத்துடன் படம் பார்க்கலாம், முகம் சுளிக்காமல் படம் உள்ளது.
சபாஷ் சேரன் உங்கள் முயற்சிக்கு!! வளர்க மேன்மேலும்.
அன்பர்களே, இது போன்ற நல்ல படங்களை திரையரங்கதிற்கு சென்று பாருங்கள்!!