இந்திய பல்கலைக்கழகங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதன் தொடர்பான பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் உதவித் தொகை அளிக்கிறது. மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கல்விக் கட்டணம், புத்தகம், இதர செலவுகளுக்காக தொடர்ந்து 4 ஆண்டுகள் வரை அளிக்கப்படும். இந்தியாவில் மைக்ரோசாப்ட் ஆய்வுப் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்திய பல்கலையில் பிஎச்.டி. பயில பதிவு செய்திருப்பவர்கள் முதல் மூன்றாம் ஆண்டில் இருக்கும் மாணவர்கள் வரை இதற்கு தகுதியானவர்கள்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. பயில வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஏப்ரல் 17ஆம் தேதி. மேலும் விவரங்களுக்கு: http://research.microsoft.com