Showing posts with label இலவசம். Show all posts
Showing posts with label இலவசம். Show all posts

Friday, November 18, 2011

வாக்களித்த பலனை மக்கள் அனுபவிப்பார்கள்

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களுக்கு நல்ல மாற்றம் கிடைத்துள்ளது...ஐந்தாண்டுகளாக பால் விலை மற்றும் பேரூந்து கட்டணங்களை உயர்த்தாமல் ஆட்சி செய்த கலைஞரின் நிர்வாகம் எங்கே? ஆறு மாதத்துக்குள் ..இப்படி உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மக்களின் கழுத்தை அறுக்கும் இந்த விலை உயர்வினை அறிவித்துள்ள ஜெயாவின் நிர்வாக திறமை எங்கே?ஏன் பீர்..விஸ்கி போன்ற ..மது வகைகளின் விலையை உயர்த்துவதில் என்ன கஷ்டம்?சிகரட்..பீடி..வகைகளின் விலையை உயர்த்தி இருக்கலாமே? அதை விட்டு மக்களின் அன்றாட இன்றி அமையாத பொருளான பாலின் விலையையும்...பேரூந்து கட்டணத்தையும் உயர்த்துவது என்ன நியாயம்?

 

வாக்களித்தததன் பலனை மக்கள் அனுபவிப்பார்கள் என குஷ்பு கூறியது உண்மையாகி உள்ளது...வீணாக கடந்த ஆட்சியின் மீதும்..மத்திய அரசின் மீதும் பழியை போடுகிறார்...கேட்ட நிதி கிடைத்ததாக நீங்கள்தானே டில்லியில் கூறினீர்கள்...இப்போ ஏன் இந்த வழக்கமான பல்டி?கடந்த ஆட்சியின் நிர்வாக ஊழல்கள் களையப்பட்டதாக கூறினீர்களே ...அந்த களைஎடுப்பின் மூலம் கிடைத்த நிதி எங்கே? நிழலின் அருமை வெயிலில் போனால் தெரியும்...கலைஞரின் அருமை இப்போது பலருக்கு புரிந்திருக்கும்....தனியார் பேரூந்து உரிமையாளர்களை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு....தனியார் பால் உற்பத்தியினரை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு...என்ன செய்தால் என்ன...மீண்டும் சங்கரன்கோவில் இடை தேர்தலிலும் மக்கள் உங்களுக்குத்தான் வாக்களித்து நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்..அதன்மூலம் இந்த விலை உயர்வை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்று சொல்ல போகிறீர்கள்...எனவே மேலும் பல விலை உயர்வுகளை அறிவிக்க வேண்டுகிறேன்....தமிழ் மக்கள்..ரொம்ப நல்லவுங்க,,எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க…

 

உள்ளாட்சித் தேர்தல் வரை கமுக்கமாக இருந்துவிட்டு ஜெ. தனது வேலையைக் காட்டி விட்டார். எல்லோரும் ஜெ.வை துணிச்சலான பெண்மணி என்பர். உண்மையிலேயே நெஞ்சுரம் இருந்திருந்தால், இந்த விலை ஏற்றத்தை முன்பே செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே காரணம். இலவச மின்சாரம், இலவச தொலைக்காட்சி, இலவச ஈருருளை வண்டி, இலவச பேருந்து பயணம், இலவச மடிக்கணினி, இலவச மின் ஆட்டுக்கல் மற்றும் அரைப்பான், இன்னபிற.... இன்னபிற... அப்பப்பா எத்தனை இலவசங்கள். இதுவும் ஒரு கையூட்டே! அப்புறம் ஏன் கருவூலம் காலியாகாது? அதை எல்லாம் நம் தலையில்தானே ஏற்ற வேண்டும்! கையாலாகாத அரசியல் வியாதிகள்!! இந்த விலைவாசி ஏற்றத்துக்கு எல்லோரும் கருத்து சொல்லும்போது, அம்மா கூட்டணியில் இருந்து வாக்குக் கேட்ட 'தொழிலாள தோழர்கள்' கருத்துச் சொல்லாமல் உண்டியல் குலுக்கப் போய்விட்டார்களா? இல்லை, எதிரில் உட்கார வேண்டிய 'படைத்தளபதி' இன்னும் 'தெளிவு' பெறவில்லையா?

 

மானங்கெட்ட இந்த மனிதர்களுக்கு வாக்களித்த நாம் எப்போதுதான் கொள்ளிக்கட்டையால் தலையச் சொறிந்திருக்கின்றோம் என்பதை உணர போகின்றோம்?

Wednesday, August 24, 2011

அ.தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை

100 நாட்களில் என்னங்க செய்திட முடியும். வெறும் நல திட்டங்கள் அறிவிப்பு தானே வந்திருக்கு. அது செயல்படுத்த பட்ட பின்னர் சாதனைக்கு மார்க் போடலாம்.அர்ரெஸ்ட் ம நடந்திருக்கு அது வரவேற்க தக்க ஒன்று. சமசீர் கல்வியில் ஜெயா பெயில் ஆகி விட்டார். இலவசங்கள் கொடுத்து தமிழக மக்களை மீண்டும் சோம்பேறி ஆக்குவதால் பலன் இல்லை. ஜெயா பேர் சொல்லும் அளவுக்கு தமிழக மக்களுக்கு நீண்ட நாள் பயன்படும் ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்து அதில் பல் ஆயிரம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து பல ஆயிரம் குடும்பங்கள் பட்டினி இல்லாமல் வாழும் பொது தான் ஜெயா 100 மார்க் வாங்குவார். இலவசங்கள் தருவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நல்ல ஆட்சி கொடுத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்கள் கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பலி வாங்கும் படலத்தை கொஞ்ச நாள் தள்ளி போட்டு பலன் தரும் திட்டங்களை செயல்படுத்த துவங்குங்கள் அறிவிப்போடு நிற்க வேண்டாம்.

 

பொதுவாக நுறு நாட்களில் ஒரு அரசின் திறனை எடை போடுவது கடினம்..... ஆனால் ஜெயலலிதா அதை எளிது படித்தி இருக்கிறார்....சமச்சீர் கல்வி....ஜெயலலிதா எடுத்த் முடிவுகள் அனைத்தும் ஒரு நல்ல அரசுக்கான எந்த திறனை வெளிபடுத்தவில்லை....சமசீர் கல்வியில் வரட்டு பிடிவாதத்தால் கிட்டத்தட்ட் 65 நாட்கள் பிள்ளைகள் படிக்க புத்தகம் இல்லாமால் இருந்தது இந்த 100 நாளில் ஒரு சறுக்கல் என்று தான் சொல்ல வேண்டும்....அடுத்து இதே மாதரியான பிழை புதிய சட்டசபைக்கு போக மறுத்ததிலும் தொடர்ந்தது......அடுத்து ஆட்சிய எப்பிடி திறன்பட செயல்படுத்த வேண்டும் என்பதை மறந்து முழு கவனமும் திமுகவை எப்பிடி எந்த பிரச்னையில் சிக்க வைப்பது என்பதில் அதிக நேரம் விரயமாகபட்டு உள்ளது....அடுத்து மத்திய திட்ட குழு நீதி கேக்கும் போது...அது சாத்தியமா என்று யோசிக்காமல் இரண்டு லட்சம் கோடி நிதி கேட்டது...அதாவது இந்திய பட்ஜெட்டில் இருபது சதவிதம் நிதி கேட்டது.....தேவையான நிதி பெறுவதில் சாமர்த்தியாமாக செயல்படவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது..... அடுத்து பெரும்பாலான மந்திரிகள் அவர்கள் துறை சமந்தப்பட்ட அடிப்படை கூட தெரியாமல் இருப்பது அடுத்த பின்னடைவு....அடுத்து இலவச அறிவிப்புகள்..... இதுவரை இலவசமா....மக்களை சோம்பேறி ஆக்க பாக்கிரிய?...என்று கூக்குரல் விட்டவர்கள்.....இன்றைக்கு அதே ஜெயலலிதா செய்கிறார் என்றவுடன்.....ஆகோ ஓகோ என்று மெய் சிலிக்கிரார்கள்..... இலவசத்தை பொறுத்தவரை சென்ற திமுக அரசின் செயல்களும் தவறு..... ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் அதையும் மிஞ்சுகிறார்...இன்றைய உலக பொருளாதாரம் விழுந்து கிடிக்கிறது.....அதை பற்றி ஒன்றும் கவலைபடமால் இலவச அறிவிப்புகள்.....குறிப்பாக இந்த லேப்டாப் ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட் 3400 கோடி வேண்டும்.....இது தேவையா....ஆனால் ஒரு விசயத்தில் இந்த அரசை பாராட்டத்தான் வேண்டும்.....இலவச அறிவுப்புக்காக பட்ஜெட்க்கு முன்பே 5000 கோடிக்கு மேல் வரி ஏற்றபட்டது உள்ளது..... அதாவது மக்களிடமே பணம் வங்கி அதை மக்களிடம் இலவசம் என்ற பெயரில் தருவது ஒரு வித திறமைதான்......ஆக மொத்தத்தில் இந்த அரசு இந்த 100 நாட்களில் எதிபார்ப்பை பூர்த்தி செய்தாதோ இல்லியோ....நிறைய மக்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது....

 

ஆரம்பமே சூப்பர்...பதவி ஏற்க வந்த அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்..அம்மரண பழியை நேருமீது போட முயற்சித்து அதில் தோல்வி...அடுத்து சமசீர் கல்வி க்கு எதிராக அரசு உயர்நீதி மன்றம்,உச்ச நீதி மன்றம் என முயற்சித்து அதிலும் தோல்வி...மக்கள் மீது பட்ஜெட்டுக்கு முன்னரே வரிவிதித்து ஜனநாயகத்துக்கு ஒரு குத்து...நில அபகரிப்பு என்று சொல்லி திமுகவினர்மீது மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட அராஜகம்..... தி.நகரில் ஆளும் கட்சி எம்.எல் ஏ காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கெ கைது செய்து வைக்கப்பட்டிருந்த தனது கட்சியினரை மீட்டு வெளியே கொண்டு வந்ததோடு மட்டுமல்ல..அந்த காவல்துறை அதிகாரியையும் இடமாற்றம் செய்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிய கதை...பலகோடி செலவில் கட்டப்பட்ட செயலகத்தில் பணி செய்யாமல் பூட்டி வைத்துவிட்டு வாடகை கொடுத்து பழைய கட்டிடத்தில் செயல் படும் கொடுமை...பணவிரயம்...ஒரு புதிய மின்திட்டம் கூட இதுவரை அறிவிக்காமல் கலைஞர் துவங்கிய திட்டங்களை மட்டுமே சார்ந்து நிற்கும் கேவலம்...எல்லாவற்றிற்கும் மேலாக முட்டாள்களின் மாதமான (ஏப்ரல் பூல்) ஏப்ரலில் புது வருடம் பிறக்கும் என அறிவித்து முட்டாள்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றது .... இவைகள்தான் இந்த அரசின் நூறு நாள் பெருமைகள்...

 

ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மீது வரி விதித்து விலை உயர்த்திய பெருமை இந்த அரசையே சாரும்...தலைமை செயலகம் கட்டிடம் தரமற்றது என கூறிவிட்டு இப்போது அதை மருத்துவமனையாக பயன் படுத்தப்போவதாக கூறி அந்தர் பல்டி அடித்ததும் இந்த அரசே.... கருத்து சொல்லும் அளவு எந்த முன்னேற்றமும் இல்லை, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள், சமசீர் சறுக்கல்கள், இலங்கை தமிழர் நிலையில் இரண்டும் கெட்டான் நிலைப்பாடு, தலைமை செயலக முடிவில் தனிநபர் விமர்சனம்... ஒரே ஆறுதல் சட்டம் ஒழுங்கு…

 

அரசியல் பள்ளிகூடத்தில் முதல் நான்கு ஆண்டுகள் எப்படி படித்தாலும் பாஸ் தான் ! அது வரை அவர்களே கேள்வி கேட்டு அவர்களே பதில் சொல்லி அவர்களே மார்க் போட்டுகொல்வதால் எப்பவுமே நூற்றுக்கு நூறுதான் ! ஐந்தாம் அந்து பொது தேர்வில் வாங்கும் மார்க் தான் பாசா பெயிலா என்பதை நிர்ணயிக்கும் ! நடுவில் ஒழுக்க குறைபாட்டால் அல்லது பழைய தவறுக்கு டிஸ்மிஸ் ஆகாமல் இருந்தால் !

Monday, January 3, 2011

சூப்பர் ஆபர்: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்

திருப்பூரில் பண்டிகையை கொண்டாடும் "குடிமகன்'களை குஷிப்படுத்த, இலவசங்கள் என்ற அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; மதுக்கடை பாரில் சரக்கு விற்பனையை அதிகரிக்க, இத்தகைய யுக்தி கையாளப்படுகிறது.

புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில், ஜவுளிக் கடைகள், பர்னிச்சர், நகைக்கடைகளில் வழக்கமாக இலவசங்களும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்படும். விற்பனையை அதிகரிக்க, இதுதொடர்பான போஸ்டர் ஒட்டப்பட்டு, நோட்டீஸ்களும் மக்களுக்கு வினியோகிக்கப்படும். திருப்பூரில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில், குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வகைகளை வாங்கும் "குடிமகன்'களுக்கு, இலவசங்களை தருவதாக அறிவித்து, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது, இது, "குடிமகன்'களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பின்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள பார் ஒன்றில் இத்தகைய சலுகை அளிக்கப்படுகிறது. அவர்கள் வினியோகிக்கும் நோட்டீசில், "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டம்; உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; காலை 11 முதல் மாலை 5 மணி வரை மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்; இரண்டு லார்ஜ் வாங்கினால் ஒரு லார்ஜ் இலவசம்; ருசியான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளுடன்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கலால் மாவட்டத்தில், ஒரு மாதத்துக்கு சராசரியாக 65 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடந்து வருகிறது; பண்டிகை காலங்களில், கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் வரை சரக்கு விற்பனை எகிறும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என 20 நாட்களுக்குள் மூன்று பண்டிகை தினங்கள் தொடர்ந்து வருவதால், திருப்பூரில் சரக்கு விற்பனையில் முன்னிலை பெற "குடிமகன்'களை கவரும் வகையில், இலவசம் அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

என் கருத்து…

  • சூப்பர் ஆபர்...
  • இது ரொம்ப மோசம். யாருக்குமே சமூகத்தை பற்றிய அக்கறை சிறிது கூட இல்லையா....
  • நம்ம நாட்டை ரொம்ப நல்ல டெவலப் பண்றன்கப்பா,,,,,,,,,,,,,,...

Sunday, January 2, 2011

அமைச்சர் விழாவில் ஒரு ஜிலேபிக்காக கால் கடுக்க நிறுத்தப்பட்ட பிஞ்சுகள்

கோவை: அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் ஒரு ஜிலேபிக்காக, பள்ளிக் குழந்தைகள்ஒரு மணி நேரம் கால் கடுக்க நிற்க வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 34ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச பொங்கல் பொருட்கள், இலவச வேட்டி சேலைவழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான துவக்கவிழா, புலியகுளம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நேற்று நடந்தது.கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார்.

நன்றி: தினமலர்

கால் கடுக்க நின்ற சிறுவர்கள்:இந்த விழா, நேற்று காலை 10.00 மணிக்கு துவங்கியது. விழா நடந்த பள்ளியில் உள்ளஉண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 20 பேர், விழா துவங்குவதற்கு முன்பே மேடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் இருவரைத்தவிர, அனைவரும் 10 வயதுக்குட்பட்ட இளம் சிறுவர்கள். இலவச வேட்டி, சேலை மற்றும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் விழாவுக்கும் அவர்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை. இருப்பினும் அவர்களைஅங்கு நிறுத்தியதற்கான காரணம் யாருக்கும் புரியவில்லை. அவர்களை விசாரித்தபோது, அமைச்சர் கொடுக்கப்போகும் ஒரு"ஸ்வீட்'டுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. எப்போது "ஸ்வீட்'கிடைக்குமென்ற ஏக்கத்துடன் அந்த மாணவர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகநின்றனர்.

கால் கடுக்க அவர்கள் நிற்பது தெரிந்தோ, தெரியாமலோ அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ., கோவைத்தங்கம் என வரிசையாக "மைக்' பிடித்து முழங்கிக்கொண்டிருந்தனர். எல்லோரும் பேசிமுடித்து, பயனாளிகளுக்கு பொருட்கள்வழங்கும் வரையிலும், அந்தச் சிறுவர்களுக்குத் தருவதற்கான "ஸ்வீட்' வாங்கப்படவில்லை. காத்துக் கிடந்த சிறுவர்கள்ஏமாற்றமடைவர் என்பதைக் கூட, அங்கிருந்த யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

புத்தாண்டு தினத்தில் அவர்களுக்குஏமாற்றமாகி விடும் என்பதை உணர்ந்தஆசிரியை ஒருவர், "சார், ஸ்வீட் வாங்கிட்டீங்களா, அமைச்சர் கொடுக்கிறாரா'என்று ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டிருந்தார். அவர்கள் யாரும் முறையாக பதில் கூறாததால், கடைசியாக அந்தபொங்கல் பொருட்களையாவது அந்தச்சிறுவர்களுக்குக் கொடுங்கள் என்றும்கெஞ்சிப் பார்த்தார்.அதிகாரிகளோ, "சும்மா இரும்மா.பொங்கல் பொருட்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்' என மறுத்துவிட்டனர். அந்த ஆசிரியை "அமைச்சரை ஒருவாழ்த்தாவது சொல்லச் சொல்லுங்கள்'என்று மன்றாடினார். அதற்குள் விழாமுடிந்தது. ஸ்வீட் இல்லாததால் அதிகாரிகள் கையைப்பிசைந்து கொண்டிருந்தனர்.

மேடையில் இருந்து இறங்கிய அமைச்சர்பழனிசாமி, குழந்தைகளையும், அதிகாரிகளையும் பார்த்தார்.அதிகாரிகள் எதுவும் சொல்லாததால்,ஒரு குழந்தையின் தோளில் தட்டி "சரி வருகிறேன்' எனக்கூறி விட்டுச் சென்று விட்டார். அவராகவும் ஒரு வாழ்த்தும் கூடசொல்லவில்லை. இதனால், அந்தச் சிறுவர்களின் முகங்கள், ஏமாற்றத்தில் சுருங்கின. அவர் சென்ற பின், அவசர அவசரமாக சில ஜிலேபிகளை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்கள்; அதுவும் 2மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அந்த வேதனைக் காட்சியின் உச்சக்கட்டம்.

என் கருத்து…

  • நன்றி கெட்டவர்களும் மனிதாபிமானமும் இல்லாதவர்கள் இந்த அரசியல் வாதிகள் நடக்கும் எல்லாவற்றிருக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் காலத்திற்கு என்பதை யாரும் மறக்க கூடாது...
  • மனித மதிப்பை உணராத மாண்புமிகு எதற்கு. முதலில் தலைமை பண்பை கற்று கொள்ளுங்கள். பிறகு தலைமை தாங்க செல்லுங்கள்....... இந்த மந்திரிகளை ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வைக்க வேண்டும்!...
  • அந்த விழா,அமைச்சர், தாங்கள் நிற்கும் காரணம் எதையும் மாணவர்கள் முழுமையாக உணந்திருக்கும் வாய்ப்பில்லை. இன்னும் நாம் மாணவர்களையும் ,சிறுவர்களையும் நடத்தும் முறையில் மிக மிக பின் தங்கியுள்ளது வெளிப்படுகிறது. மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் தயவு செய்து இது போன்ற செய்திகளை படித்துவிட்டு தங்களது நிகழ்சிகளில் இதுபோல மனதை வேதனை படுத்தும் சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்....
  • இது போன்ற நிகழ்வுகள் பல கல்வி நிறுவனகளில் நடை பெற்று வருகிறது என்பது உண்மை. வரும் VIP ய் குளிர்விக்க மாணவர்களை ஆட, பாட, மாஸ்டிரில் போன்று இன்னும் பல குரங்காட்டி வித்தைகளை மாணவர் மீது தினிகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு, தங்கள் கல்வி என்ற பெயரில் நடத்தும் வியாபார நிறுவனகளுக்கு தேவையானதை அடைகின்றனர். சிறிது யோசித்து பாருங்கள், இதனால் மாணவர்களுக்கு என்ன நன்மை? அவர்களை அடிமைகளாக, சர்கஸ் விலங்குகளை போல் மற்றுகிறோமே தவிர வேறு பலன் இல்லை....

Thursday, October 21, 2010

தினமலர் : மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி'

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயமே அழிஞ்சு போச்சு. விவசாயி எல்லாம் நெலத்தையும் வித்துட்டு கூலிகாரனா மாறிட்டு வர்றான். விவசாயிய சொல்லி குத்தம் இல்ல. கூலிகாரன் கிடைக்க மாட்டேங்க்குறான். என்ன என்றால் விவசாய கூலி 50 ருபா 8 மணி நேரம் கடுமையா வேலை பார்க்கணும். ஆனா இங்க 100 ருபா வேலை 1/2 மணி நேரம் கூட கடுமையான வேலை கிடையாதே 2 மணி நேரம் டைம் பாஸ் தானே.. விவசாயே உழைக்க மறக்காதே பின்னால் ரெம்ப கஷ்டம் . பின் விளைவுகளை யோசித்து செயல் படுவோம்.

இது நூறு சதவிகிதம் உண்மை. நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான், கேடு கெட்ட அரசியல்வாதிகள் மக்களை சொம்பேரியாக்கியது மட்டுமில்லாமல் முட்டாளும் ஆக்கிறார்கள்.

இலவசம் என்றுகொடுப்பதை தங்கள் சொந்தப்பணத்தில் இருந்தோ,கட்சிப்பணத்தில் இருந்தோ கொடுக்கட்டும் இந்த கர்ண மகா பரம்பரைகள். இதை யாரும் தடுக்கபோவதில்லை மக்களின்வரிப்பணத்தை வாரி வழங்க,வீணடிக்க இவர்கள் யார்? மருத்துவம்,கல்வியை அனைவருக்கும் இலவசமாக தரலாம் அதில் தவறு ஒன்றும்இல்லை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் அவர்களே தங்களுக்கு தேவையானவற்றை,தேவையான நேரத்தில்வாங்கி கொள்ள முடியும் தரமான குடிநீர்,தரமான சாலைகள் சுத்தம் சுகாதாரமான சுற்றுப்புர சுழல், கழிப்பிடவசதிகள் கட்டாயம் அனைவருக்கும் அவசியம். விலைவாசியை குறைக்க சொன்னால் ஏற்றுகின்றனர் வியாதிகள் இல்லா சூழல்,கொசுக்கள் மூலம் பரவும் பலவகை வியாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.வியாதிகள் இங்கு இலவசம். குரங்கு கையில் பூமாலை சிக்கியதை போல் நமதுஅரசியல் வாதிகளிடம் சிக்கிய ஜனநாயகம் சின்னாபின்னமாகி சீரழிந்துவருவதுவேதனையை அளிக்கிறது. மக்களுக்காகபயன்படவேண்டிய ஜனநாயகம் நமது சுயநலஅரசியல்வாதிகளுக்கு நன்றாக பயன்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இலவசமா கிடைக்கிற பொருளைவிட இலவசம் குடுக்கிற ஆளோட நோக்கத்தை முதல்ல பார்க்கணும் அப்பு..காமராஜர் மதிய உணவு போட்டார்னா அதுக்கு காரணம் புள்ளைக குறைந்தபட்சம் பள்ளிக்கூடத்துக்கு வரட்டுமேன்னுதான்..அது ஒரு உதவி.. அதை வச்சு ஓட்டு வாங்குறதெல்லாம் அந்த சுயநலமில்லாத மனுசனோட நோக்கமா இருந்ததில்லை..ஆனா இப்போ இலவசம் குடுக்கிற ஆளையும் பாருங்க..சுயநலத்தோட மொத்த உருவம்..இவரு குடுக்கிற இலவசம் ஓட்டுக்கு குடுக்கிற கையூட்டு.. ஆதாயமில்லாம யாராவது கையூட்டு குடுப்பாங்களா? கொஞ்சத்தை குடுத்துட்டு மொத்தத்தையும் ஆட்டைய போடுறதுதான் இவுங்களோட நோக்கம்..பத்து ரூபாய் கீழே கிடைக்குதுன்னு அதை எடுக்க குனிஞ்சா பின்னாடி ஆயிரம் ரூபாய் வச்சிருந்த பர்ஸ் காணாம போயிருக்கும்..அந்த பத்து ரூபாய்க்கும் இப்போ கிடைக்கிற இலவசத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....

இலவசம் , இலவசம் எங்கு பார்த்தாலும் ஒரே நீண்ட வரிசை காரணம் அரசு, ஒரு இலவச திட்டத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யும் அரசு ஏன் 25 கிமீ தொலைவிற்கு ஒரு தொழில்சாலை கட்டி வீட்டிற்கு ஒருவருக்கு வேலை ஏன் கொடுக்ககூடாது அப்படி கொடுத்தால் அனைவரையும் இலவசம் என்ற தீராத வியாதி இருந்து மீட்கலாம்

இது ஒரு தனி மனிதனின் ஆதங்கம் அல்ல. ஒட்டுமொத்த தமிழனின் குரலும்கூட....