Showing posts with label மனித நேயம். Show all posts
Showing posts with label மனித நேயம். Show all posts

Wednesday, July 27, 2011

சமச்சீர் கல்வியும் & தமிழ் நாட்டின் சாபங்களும்

 

முன்னாள் முதல்வர் கருணாநிதி 5 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு சம்பாதித்த கெட்ட பெயரை, ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே பெற்றுவிட்டார் புரட்சித் தலைவி. சமச்சீர் கல்வி முறை தமிழகத்துக்குத் தேவையா? இல்லையா? என்கிற காலக்கட்டத்தையெல்லாம் தாண்டி இப்போது தினமும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லித் தருவீர்களா? மாட்டீர்களா? என்று கேள்வி கேட்கும் நிலைமைக்குத் தள்ளிவிட்டார் ஜெயலலிதா. சமச்சீர் கல்வி புத்தகங்களில் இருக்கும் கருணாநிதியின் கவிதைகள்தான் ஜெயல்லிதாவுக்கு உறுத்தல் என்றால் அந்த ஒன்றை மட்டும் நீக்கிவிட்டு மீதமுள்ளவற்றை அப்போதே அனுமதித்திருக்கலாம்..!

கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்ற நோக்கிலேயே இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்கொண்டது தவறானது. ஒரு ஆட்சி போய் மறு ஆட்சி வந்தால் ஊழலை தோண்டலாம்.. துருவலாம்.. அதனால் பாதிப்பு இல்லை.. ஆனால் மக்களின் அடிப்படையான ஒரு விஷயத்தில்.. அதுவும் மாணவர்களின் படிப்பு சம்பந்தமான விஷயத்தில் இந்த அளவுக்கு ஜெயல்லிதா விளையாடியது கொடூரமானது.. பள்ளிக் குழந்தைகள் படிக்காமல் இருப்பதற்கான சூழல்கள் தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே வரும் இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை ஒரு மாதம் முழுவதும் அமைதி காத்திருக்க வைத்து, பின்பு அடுத்த 8 மாதங்களில் அனைத்துப் பாடங்களையும் படிக்க வைப்பது எவ்வளவு கடினம் என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும்.. இந்தப் பதைபதைப்பில் தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக இதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஏற்கெனவே 250 கோடிக்கு அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களை ஓரமாகத் தூக்கியெறிந்துவிட்டு, பழைய புத்தகங்களை அச்சடிக்க அவசரம், அவசரமாக 100 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியிருப்பது எவன் என்னைக் கேட்பான்..? யாருக்கு அந்த தகுதி இருக்கு? என்கிற ஆணவம்தான் காரணமேயன்றி, வேறு எதுவுமே இல்லை.. ஜெயலலிதா முன்பெல்லாம் தனது பேச்சில் ஆணவத்தையும், கர்வத்தையும் காட்டுவார்.

இப்போது மீடியாக்களின் முன்பு அமைதியாகி, சாந்த சொரூபியாகி, உள்புறம் மட்டும் தனது வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வேகத்தை, கோபத்தை மாநிலம் முழுவதும் நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது செயல்படுத்தினால் ஊர், ஊருக்கு அவருக்குக் கோவில் கட்ட அப்பாவி தமிழர்கள் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு அத்தனை பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பரிதவிக்கும் செயலாக இப்படியொரு முட்டாள்தனத்தை செய்யும் இவரை திருத்துவது எப்படி..? பத்தடி தூரம் தள்ளி நின்று வாய் பொத்தி, நேர் பார்வையில்லாமல் அடிமைத்தனத்தில் வாழும் அமைச்சர்களைப் பார்க்கின்றபோது நாம் யாரிடம் போய் இதைச் சொல்லி அழுவது என்றுதான் தெரியவில்லை.. தனிப்பட்ட ஈகோக்களை அரசு விஷயத்திலும், ஆட்சி விவகாரத்திலும் பயன்படுத்த்துதல் நல்ல அரசனுக்கு அழகல்ல.. உயர்நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி கேட்டு இடைக்காலத் தடை கொடுத்தபோதே மாணவர்களின் நிலைமை கருதி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை வாபஸ் பெற்று பழையபடி சமச்சீர் கல்வியை அமல்படுத்தியிருந்தால் மாநிலமும், கோர்ட் வட்டாரமும் இன்றைக்கு ஜெயல்லிதாவை புகழ்ந்திருக்கும்.. ‘மாணவர்கள் நாட்டின் வளமான எதிர்காலம். அரசு அதை கருத்தில் கொண்டு உத்தரவை உடனே அமல்படுத்தும் என்று நம்புகிறோம்’ என்று தீர்ப்பின் இறுதியில் வேண்டுகோள் வைத்துள்ளது உயர்நீதிமன்றம். இதன் தீர்ப்பில் தமிழக அரசு நியமித்த கமிட்டியின் சிபாரிசுகளைவிட, அக்கமிட்டியையே நிராகரித்த நீதிபதிகளின் உத்தரவை நான் மிகவும் உயர்வாக நினைக்கிறேன்..! அந்தக் கமிட்டியில் இருந்தவர்களுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் என்ன தொடர்பு..? கல்வியை விற்பனை செய்பவர்களை, அதுவும் தனக்குச் சாதகமாக கருத்துச் சொல்வார்கள் என்று உடன்படிக்கை செய்தேதான் இந்தக் கமிட்டியை நியமித்த்து வெட்டவெளிச்சம்..!

உச்சநீதிமன்றத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரிக்கப்படும். தீர்ப்பு வழங்க பத்து நாட்களாகும். இத்தனை நாட்கள் பொறுத்த மாணவர்கள் இன்னுமொரு பத்து நாட்கள் பொறுக்க மாட்டார்களா என்று ஆத்தா நினைக்கிறார். ஒருவேளை அங்கேயும் எதிர்ப்பாகவே தீர்ப்பு வந்துவிட்டால் அகிலம் போற்றும் அங்கயற்கண்ணி என்ன செய்வாரோ..? கருப்புப் போர்வையை போர்த்திக் கொண்டு தினமும் கோட்டைக்கு வந்து செல்வாரா? அல்லது மீண்டும் ஏதாவது ரகளைதான் செய்வாரா? யாருக்குத் தெரியும்..? ஆத்தாவின் குணம் எப்போதும் ஒன்றுபோல் இருந்த்தில்லை. அமாவாசைக்கும், பெளர்ணமிக்கும் ஆடி அடங்கும் அலைகளைப் போல இவரது செயல்களும், பேச்சுக்களும் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன.. சென்னை உயர்நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பில் ஒரு அம்சம் மட்டுமே குறையாக உள்ளது. மேலும் சேர்க்க வேண்டிய பாடங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் 3 மாதங்களுக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளது. இந்த ஒரு அனுமதியை வைத்து மீண்டும் 3 மாதங்கள் கழித்து பத்து பாடங்களை சேர்த்துக் கொடுத்தால் என்னாகும்..? படிப்புச் சொல்லித் தர வேண்டியது ஆசிரியர்களின் கடமை என்றாலும், அதற்கு நேரம், கால அவகாசம் தர வேண்டாமா..? நீதிமன்றம் இந்த வரிகளைக் குறிப்பிட்டிருக்கவே தேவையில்லை..! நாம்தான்.. நன்கு தெரிந்துதான், கண்ணைத் திறந்து கொண்டு பார்த்தநிலையில்தான் ஆத்தாவை கோட்டையில் கொலுவேற்றியிருக்கிறோம். என்ன நடந்தாலும், எது நடந்தாலும் வேறு வழியில்லாமல் இந்தக் கொடுமையையும் இன்னமும் 5 ஆண்டுகளுக்கு நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும்..!...

தமிழக அரசின் வழக்கறிஞர் அடுத்த வருடத்தில் சமச்சீர் கல்வி கொண்டு வர வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்... வாய்ப்பு என்று சொல்வதின் அர்த்தம் என்ன....வரலாம்...வரமாலும் போகலாம்....நான் ஏற்கனவே சொன்னபடி.....தனது பரம்பரை சொந்தங்கள் முலம் உச்ச நிதிமன்றத்தில் ஜெயலத தனது விருப்பபடி தீர்ப்பை பெற்றால்....சமசீர் கல்விக்கு நிரந்தர முடு விழதான்.....அது ஒரு வறட்டு பிடிவாதம் மற்றும் பரம்பரை சொந்தங்கள் நினைத்தால் எந்த அநிதியும் நியாயபடுத்த முடியும் என்பதின் சான்றாக அமையும்......இதில் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோரும்...தன் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளுடன் ஒரே பட திட்டத்தை படிப்பதா என்கிற big briother attitude நோக்கில் இதை பார்கிறார்கள் என்பதும் உண்மை....இதில் கொடுமை என்ன வென்றால் அந்த மெட்ரிக் பாட திட்டத்தை படிக்கும் பிள்ளைகள் இரண்டு சதவிதம் தான்........அதை விட கொடுமை அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் இந்த சமச்சீர் கல்வியால் பயன் பெறபோவது தமிழ் வழி பயலும் தங்கள் பிள்ளைகளும்தான் என்று புரியாமல் இதை எதோ ஜெயலலிதாவின் வெற்றி தோல்வியாக பார்பத்துதான்......ஆனால் அவரோ குழைந்தைகள் படிப்பு இரண்டு மாதமாக வீணாகிறது என்கிற கவலை துளியும் இன்றி பிடிவாதம் ஒன்றே இலக்கு தனது என்று இருக்கிறார்....

தைரியமான முடிவுகளை எடுப்பதில் கருணாநிதியை விட ஜெயா கிரேட் எனலாம். ஆனால் பொதுநலம் என்று வரும்போது கூட பிடிவாதம் பண்ணுவது ... மஹா பாவம் என்பதை ஜெயா உணரவேண்டும் கடந்த கால தவறுகளை செய்யமாட்டோம் என உறுதி அளித்துவிட்டு தப்பு செய்தால் அடுத்த எலெக்சன் மீண்டும் பாடம் புகட்டும் ஜாக்கிரதை...

கல்விக்காக இந்த அம்மையாரிடம் கெஞ்சவேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டதை நினைத்து வருந்துவதா அல்லது இப்படியும் கல்வியை அரசியலாக்கிவிட்ட அற்பர்களை நினைத்து என்ன செய்வது.? இந்த இரண்டு கூட்டங்களுமே தமிழ் நாட்டின் சாபங்கள்....

Sunday, January 2, 2011

அமைச்சர் விழாவில் ஒரு ஜிலேபிக்காக கால் கடுக்க நிறுத்தப்பட்ட பிஞ்சுகள்

கோவை: அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் ஒரு ஜிலேபிக்காக, பள்ளிக் குழந்தைகள்ஒரு மணி நேரம் கால் கடுக்க நிற்க வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 34ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச பொங்கல் பொருட்கள், இலவச வேட்டி சேலைவழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான துவக்கவிழா, புலியகுளம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நேற்று நடந்தது.கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார்.

நன்றி: தினமலர்

கால் கடுக்க நின்ற சிறுவர்கள்:இந்த விழா, நேற்று காலை 10.00 மணிக்கு துவங்கியது. விழா நடந்த பள்ளியில் உள்ளஉண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 20 பேர், விழா துவங்குவதற்கு முன்பே மேடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் இருவரைத்தவிர, அனைவரும் 10 வயதுக்குட்பட்ட இளம் சிறுவர்கள். இலவச வேட்டி, சேலை மற்றும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் விழாவுக்கும் அவர்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை. இருப்பினும் அவர்களைஅங்கு நிறுத்தியதற்கான காரணம் யாருக்கும் புரியவில்லை. அவர்களை விசாரித்தபோது, அமைச்சர் கொடுக்கப்போகும் ஒரு"ஸ்வீட்'டுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. எப்போது "ஸ்வீட்'கிடைக்குமென்ற ஏக்கத்துடன் அந்த மாணவர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகநின்றனர்.

கால் கடுக்க அவர்கள் நிற்பது தெரிந்தோ, தெரியாமலோ அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ., கோவைத்தங்கம் என வரிசையாக "மைக்' பிடித்து முழங்கிக்கொண்டிருந்தனர். எல்லோரும் பேசிமுடித்து, பயனாளிகளுக்கு பொருட்கள்வழங்கும் வரையிலும், அந்தச் சிறுவர்களுக்குத் தருவதற்கான "ஸ்வீட்' வாங்கப்படவில்லை. காத்துக் கிடந்த சிறுவர்கள்ஏமாற்றமடைவர் என்பதைக் கூட, அங்கிருந்த யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

புத்தாண்டு தினத்தில் அவர்களுக்குஏமாற்றமாகி விடும் என்பதை உணர்ந்தஆசிரியை ஒருவர், "சார், ஸ்வீட் வாங்கிட்டீங்களா, அமைச்சர் கொடுக்கிறாரா'என்று ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டிருந்தார். அவர்கள் யாரும் முறையாக பதில் கூறாததால், கடைசியாக அந்தபொங்கல் பொருட்களையாவது அந்தச்சிறுவர்களுக்குக் கொடுங்கள் என்றும்கெஞ்சிப் பார்த்தார்.அதிகாரிகளோ, "சும்மா இரும்மா.பொங்கல் பொருட்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்' என மறுத்துவிட்டனர். அந்த ஆசிரியை "அமைச்சரை ஒருவாழ்த்தாவது சொல்லச் சொல்லுங்கள்'என்று மன்றாடினார். அதற்குள் விழாமுடிந்தது. ஸ்வீட் இல்லாததால் அதிகாரிகள் கையைப்பிசைந்து கொண்டிருந்தனர்.

மேடையில் இருந்து இறங்கிய அமைச்சர்பழனிசாமி, குழந்தைகளையும், அதிகாரிகளையும் பார்த்தார்.அதிகாரிகள் எதுவும் சொல்லாததால்,ஒரு குழந்தையின் தோளில் தட்டி "சரி வருகிறேன்' எனக்கூறி விட்டுச் சென்று விட்டார். அவராகவும் ஒரு வாழ்த்தும் கூடசொல்லவில்லை. இதனால், அந்தச் சிறுவர்களின் முகங்கள், ஏமாற்றத்தில் சுருங்கின. அவர் சென்ற பின், அவசர அவசரமாக சில ஜிலேபிகளை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்கள்; அதுவும் 2மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அந்த வேதனைக் காட்சியின் உச்சக்கட்டம்.

என் கருத்து…

  • நன்றி கெட்டவர்களும் மனிதாபிமானமும் இல்லாதவர்கள் இந்த அரசியல் வாதிகள் நடக்கும் எல்லாவற்றிருக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் காலத்திற்கு என்பதை யாரும் மறக்க கூடாது...
  • மனித மதிப்பை உணராத மாண்புமிகு எதற்கு. முதலில் தலைமை பண்பை கற்று கொள்ளுங்கள். பிறகு தலைமை தாங்க செல்லுங்கள்....... இந்த மந்திரிகளை ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வைக்க வேண்டும்!...
  • அந்த விழா,அமைச்சர், தாங்கள் நிற்கும் காரணம் எதையும் மாணவர்கள் முழுமையாக உணந்திருக்கும் வாய்ப்பில்லை. இன்னும் நாம் மாணவர்களையும் ,சிறுவர்களையும் நடத்தும் முறையில் மிக மிக பின் தங்கியுள்ளது வெளிப்படுகிறது. மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் தயவு செய்து இது போன்ற செய்திகளை படித்துவிட்டு தங்களது நிகழ்சிகளில் இதுபோல மனதை வேதனை படுத்தும் சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்....
  • இது போன்ற நிகழ்வுகள் பல கல்வி நிறுவனகளில் நடை பெற்று வருகிறது என்பது உண்மை. வரும் VIP ய் குளிர்விக்க மாணவர்களை ஆட, பாட, மாஸ்டிரில் போன்று இன்னும் பல குரங்காட்டி வித்தைகளை மாணவர் மீது தினிகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு, தங்கள் கல்வி என்ற பெயரில் நடத்தும் வியாபார நிறுவனகளுக்கு தேவையானதை அடைகின்றனர். சிறிது யோசித்து பாருங்கள், இதனால் மாணவர்களுக்கு என்ன நன்மை? அவர்களை அடிமைகளாக, சர்கஸ் விலங்குகளை போல் மற்றுகிறோமே தவிர வேறு பலன் இல்லை....

Saturday, May 30, 2009

More thoughts….இந்தியாவுக்காகப் போரிட்டோம்- இராஜபக்ஷே?

After reading this இந்தியாவுக்காகப் போரிட்டோம்- ராஜபட்ச, certainly it takes me the following conclusion… sorry, i was pushed too :)

I was thinking in many ways like this (again pushed too)…

1) இந்தியாவுக்காக போரிட்டோம் தமிழக தலைவர்கள் வாழ்த்தினார்கள் என்பது ராஜபக்சே சொல்லித்தான் யாருக்காவது தெரியவேண்டுமென்றால் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன். நடக்கிற விடயங்களை வைத்து ஐந்து வயது குழந்தை கூட இதைச் சொல்லும்

2) படிபறிவு இல்லாத ஜென்மங்கள் புலம்புவதையெல்லாம் பெரிதுபடுத்த கூடாது. சிங்கள ராணுவம் அடிக்க ஆரம்பித்தவுடன் இவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் போல் வந்து நின்றது எங்கள் தமிழ்நாட்டில்தான் என்பதை சுலபமாக மறந்துவிட்டார். இந்தியர்களை பொறுத்தவரைக்கும் இலங்கை பிரச்சினை என்பது நன்றி கெட்ட நயவஞ்சகர்களால், பயங்கரவாதிகளால் எங்கள் சொந்த மண்ணில் நடந்த ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு முன், படுகொலைக்கு பின் என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறோம்.தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக நாம் நடத்திய போராட்டங்களுக்கு நன்றி காட்டும் லட்சனம் இதுதானா?

3) இந்தியாவின் சார்பாகப் போரிட்டோம் என்று சொல்வதை விட எங்கள் சார்பாகப் போரிட்டு இனப் படுகொலைகளைச் சரியாகச் செய்து முடித்த காங்.அரசிற்கு நன்றி!
எஙகளைப் பழி பாவத்தில் இருந்து காப்பாற்றி ஐநா மன்றத்தில் எங்களுக்காகக் குரல் கொடுத்து உத்தமப் பட்டம் வாங்கித் தந்த சோனியா அரசிற்கு நன்றி!
இரு நாட்டு அதிகாரியாய் நடந்து எங்களை வழிநடத்தி முழுமையான சிங்கள நாடாக மாற்றித் தந்துள்ள நாராயணன், மேனன் முதலான அதிகாரிகளுக்கு நன்றி!
எங்களிடம் வாங்கிய செல்வத்திற்கு வஞ்சமில்லாமல் எங்களின் தூதர்களாக விளங்கிய இராம், சோ, சு.சா. முதலான கும்பல்களுக்கு நன்றி! இனி நான் / நாங்கள் யார் என்பதைக் காட்டப் போகும் வரை பொறுமை காக்கும் அனைவருக்கும் நன்றி என்றல்லவா சொல்ல வேண்டும். இதில் ஏன் அப்பாவி இந்திய மக்களையும் தமிழக மக்களையும் கூட்டாளி ஆக்குகின்றார். நம் மண்ணில் நாமே மண்ணை வாரிக் கொண்டாற் போல் பகைவர்களிடம் ஆளும் பொறுப்பை ஒப்படைத்தோம் அல்லவா? அதுதான் கொக்கரிக்கிறார். காலம ஒரு நாள் மாறும்! அறம் வெல்லும்!

4) தமிழ் ஈழத்திலிருந்து வரும் செய்திகள், படங்கள், இராஜபக்ஷே எவ்வளவு கொடூரமான முறையில் தமிழர்களை கொன்று குவித்திருக்கிறான் என்பதை காட்டுகின்றது. இதைப் பார்க்கும் ஒவ்வொரு தமிழ் இரத்தம் ஓடும் தமிழனின் இதயத்திலும் இரத்தம் கசிந்துக்கொணடிருக்கிறது. தமிழன் எந்த இந்தியாவை தனது தாயகம் என எண்ணியிருந்தானோ அந்த இந்தியா இந்தக் கொடிய செயலுக்கு உதவியதோடு மட்டும் நிற்காமல் இன்னும் கொடியவன் இராஜபக்ஷேவிற்கு தொடர்ந்து உதவுவதை நினைத்து வேதனையில் வாடி தனது இனம் இன்று உலக அரங்கில் அனாதையாக, அகதிகளாக, ஆதரவற்றவர்களாக, நாதியற்றவர்களாக, நாடற்றவர்களாக அலையும் நிலையை எண்ணி எண்ணி ஏங்கி தவிக்கிறான். இந்த நிலையிலும் தமிழர்களின் போலி தமிழின தலைவர்களது துரோகம் தொடர்வதையும் எண்ணி வேதனையில் வாடுகிறான். இதற்கு முடிவு ஏற்பட தமிழினம் தடைகளை தகர்ந்தெறிய முயலவேண்டும். தோல்வியே வெற்றியின் படி என்பதை உணர்ந்து வீறுகொண்டு எழுந்தால் இறுதி வெற்றி தமிழினத்திற்கே.

5) விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை ..../ இது உண்மைதான். ஆனால் ஈழ மக்களுக்கு தமிழகம் எப்போதும் ஆதரவாக இருக்கும். புலி வேறு, ஈழ மக்கள் வேறு. இதை ஈழ-புலிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனல் அதுதான் உண்மை. புலிகள் செய்த வன்முறையால் தமிழகம் பிரம்மித்து என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் குளம்பி இருந்தது. இப்போது புலிகள் இல்லாததால் தமிழகத்தில் ஈழ எதிர்ப்பு இருக்காது. வை.கோ, நெடுமாறன்.. போன்றோர் புலிகளை முன்வைத்து ஈழ பிரச்சினையை அனுகாமல் ஈழ மக்களுக்காக அனுகினால் ஈழம் மலரும். மேற்க்கதிய நாடுகலில் ஈழம் குறித்து ஒரு விழிப்பு உணர்வு வந்துள்ளது. இந்த ராஜபக்சே என்ன குதித்தாலும் மேற்க்கு நாடுகள் இவரை சும்மா விடபோவது இல்லை. ரஜபக்சே உலக கோர்ட்டில் தமிழர்களை 'Ethnic cleansing ' செய்தார் என குற்றம் சாட்டப்படுவார். அப்போது இந்த சுண்டைகாய் சீரீ லங்கா சும்மா வயை மூடிக்கொண்டு இருக்கும் வேரேதும் செய்ய முடியாது. இந்த நல்ல சந்தர்ப்பத்தை ஈழ தமிழர்கள் மறுபடியும் கோஸ்ட்டி சண்டை போட்டு கெடுதுக்கொள்ளக்கூடாது. தமிழகத்தில் தமிழின உணர்வு உள்ள ஒரு தலைவர் வர வேண்டும். வருவாரா…

6) ராஜபட்சயை பாராட்டிது வேறு யார் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட போது அதைத் தடுக்க நாதியற்ற தமிழின துரோகிகள்.

I always believe on onething…

சூரியனை பார்த்து நாய்கள் ஊளையிடுகிறது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்,
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு”

Video : Sri Lankan War Victim’s stories untold : CNN


More than 20,000 civilians were killed in the final months of Sri Lanka's civil war -- nearly three times previous estimates, The Times newspaper in Britain reported Friday.

Per CNN’s Sara Sidner,

“I’m back in the helicopter with the U.N. delegation leaving Sri Lanka’s war torn north.

I am beside myself with frustration. We we’re given mere minutes to speak with the victims of war now living in camps.

There are more than 250,000 people in these camps and we only got to talk to two.

No matter what anybody writes from this trip it will not be sufficient.

We were hurried by the soldiers and hurried by the U.N. delegation that had a flight to catch.

I realize we would not have had much of an opportunity at all to tell the civilians’ account of the war if it wasn’t for this chance handed to us by the U.N., but as far as I’m concerned the story of the innocent caught in the middle of Sri Lanka’s war still hasn’t been told properly.”

பிரித்தானியாவில் 12 நாளாக ரிம் மார்ட்டினின் இனம் கடந்த பட்டினி போராட்டம்

தமிழினம் படும் துன்பங்களை நேரில் கண்ட ரிம் மார்ட்டின் அவர்கள் 4 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்றுடன் 12 ஆவது நாளாக உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழினத்தின் நாட்டை அங்கீகரிக்க ஒரு நாடு இல்லை என்ற போதிலும் பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான மக்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் 10 வரையிலான தமிழீழத் தேசியக் கொடி பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தை அலங்கரித்துள்ளது.

தமிழினம் படும் துன்பங்களை நேரில் கண்ட ரிம் மார்ட்டின் அவர்கள் 4 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்றுடன் 12 ஆவது நாளாக உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை பாதிப்படையும் போதிலும் தமிழர்களுக்காக முன்னெடுக்கும் இந்த உன்னத தியாக போராட்டத்தை தளராத மன உறுதியுடன் தொடர்கின்றார்.

இதேவேளை இன்று (30.05.09) காலை பிரித்தானியாவின் பிரதம ஊடகங்கள் ஆன Sunday observer மற்றும் Times ஆகியன சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையின் போது காணாமல் போனவர்கள், இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை நாடாளுமன்ற சதுக்கத்தில் நேரடியாக வந்து சேகரிக்க இருப்பதால் பாதிக்கப்பட்ட உங்கள் உறவினர்களின் புகைப்படங்களை எடுத்து வந்து இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்தும் படி தாழ்மையாக கேட்டுகொள்கின்றனர் பிரித்தானிய தமிழ் இளையோர்கள்.

The Times பத்திரிகையின் நேற்றைய பிரதியில் சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இனப்படுகொலை தொடர்பான செய்திகள் வெளியானது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடகங்களின் வருகையை முன்னிட்டு தமிழ் இளையோரால் கவனயீர்ப்பு தெரு நாடகம் ஒன்று நாளை நாடாளுமன்ற சதுக்கத்தில் நிகழ்த்தப்படவுள்ளது.

தமிழ் மக்களின் அவலத்தை ஊடகங்கள் மூலம் வெளிக்காட்டுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாளை நாடாளுமன்ற சதுக்கத்தை நிறைக்கும்படி வேண்டுகின்றனர் இளையோர்கள்.

 

 

 

 

Amnesty International calls independent probe for Srilanka’s ‘bloodbath’

Amnesty International on Saturday called for an independent probe into the number of civilians killed in the final weeks of the war against LTTE and also urged the UN to reveal its own estimates.

The call by the rights group followed a report in the Times of London newspaper on Friday citing confidential UN reports that more than 20,000 civilians were killed by Sri Lankan army shelling.  The report followed weeks of allegations that large numbers of civilians had been killed as the army closed in on Tamil Tiger rebels to end the war.

Amnesty's Asia Pacific director Sam Zarifi accused both sides of war crimes and called for an independent international probe.  "The Times report underscores the need for this investigation and the UN should do everything it can to determine the truth about the 'bloodbath' that occurred in northeast Sri Lanka," Zarifi said in statement. The statement said the UN "must immediately publicise its estimate of the number of civilians killed by the two sides in the final weeks of fighting".

Related articles:
In Tamil: இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழித்தது சிறிலங்கா; 20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை- 'த ரைம்ஸ்'
In English: http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6391265.ece

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் 'நாடக நடுநிலைமை': 'குமுதம்' சாடல்

 

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்தியாவில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் 'நாடக நடுநிலைமை'யை கடைப்பிடித்து வருவதாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழ் சாடியுள்ளது.

இது தொடர்பாக 'குமுதம்' வார இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு:

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.

சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.

இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது.

அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்... இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

Thursday, September 25, 2008

மனித நேயம் காத்த பெண் போலீசுக்கு தங்க வளையல்கள் பரிசளித்து கவுரவம்

 

imageகொச்சி:மருத்துவமனையில் இறந்த ஏழைப் பெண்ணின் உடலை பெறு வதற்கு, அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தனது தங்க வளை யல்களை கழற்றிக் கொடுத்தார் கேரளாவைச் சேர்ந்த பெண் போலீஸ். அவரின் மனித நேயமிக்க இந்த செயலை பாராட்டி கோல் கட்டா தன்னார்வ தொண்டு நிறுவனம், நான்கு தங்க வளையல் களை பரிசளிக்க முடிவு செய் துள்ளது. 

கேரளா திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் உஷா. ஏழைக் குடும் பத்தை சேர்ந்தவர். சில வாரங் களுக்கு முன் உஷாவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற் பட்டது. அதில் உஷா கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஒல்லூர் போலீஸ் ஸ்டே ஷனில் புகார் செய்யப் பட்டது. விசாரணை நடத்தும் படி, அங்கு பணிபுரிந்த பெண் போலீஸ் அபர்ணா மற்றும் மேலும் ஒரு போலீஸ்காரரையும் அனுப்பி வைத்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற் குள், உஷா இறந்து விட்டார். உஷாவின் உடலை உறவினர் களிடம் ஒப்படைக்க மருத்துவ மனை நிர்வாகம் மறுத்து விட்டது. சிகிச்சை அளித்ததற் கான கட்டணமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என, மருத்துவ மனை நிர்வாகம் கண்டிப்பாக கூறி விட்டது. எங்களிடம் அத்தனை பணம் இல்லை என, உறவினர்கள் கூறியும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண் போலீஸ் அபர்ணா, மருத்துவமனை நிர் வாகிகளிடம் பேசி, கட்டணத்தை 20 ஆயிரம் ரூபாயாக குறைத்தார். ஆனால், அந்த பணத்தையும் அவர் களால் செலுத்த முடியவில்லை.

நேரம் கடந்து கொண்டிருந் தது. உஷாவின் உறவினர்கள் அழுது புலம்பினர். எங்கெங்கோ சென்றும் பணம் கிடைக்கவில்லை. இதைப் பார்த்த அபர்ணாவின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. உஷாவின் உறவினர்களிடம் சென்று, தான் அணிந்திருந்த இரண்டு தங்க வளையல்களையும் கழற்றிக் கொடுத்தார். இதை அடகு வைத்து, உடலை திரும்ப பெறுங்கள் என கூறினார். இதையடுத்து, வளையல் களை அடகு வைத்து உஷாவின் உடலை உறவினர்கள் திரும்ப பெற்றனர். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.

இதைப் பார்த்த கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு வர்த்தக நிறுவனம், அபர்ணாவின் மனித நேயத்தை பாராட்டி, அவருக்கு நான்கு தங்க வளையல்களை பரிசளிக்க முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சந்திரா கூறியதாவது: இதுபோன்ற மனித நேயச்செயல்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அப்போது தான், மனித நேயம் அதிகரிக்கும். எங்கள் நிறுவனத்தின் நோக்கமும் அதுதான். அடுத்த ஆண்டு அபர்ணாவை கோல்கட்டாவிற்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்த திட்ட மிட்டுள்ளோம். அப்போது, அவருக்கு வளையல்கள் பரிசளிக்கப்படும். இவ்வாறு சந்திரா கூறினார்.